இன்று நமது பெருவாரியான நண்பர்கள் உபயோகபடுத்துவது windows 7. அவர்கள் தங்கள் கணினியை அழகுபடுத்த பல wallpapers-ஐ மைக்ரோ சாப்ட் கொடுத்துள்ளது. ஆனால் அவற்றில் சில wallpapers நாம் உபயோகபடுத்த முடியாதபடி hide –ஆக இருக்கும். அதை பற்றி நண்பர்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சரி மறைந்திருக்கும் wallpapers-ஐ எப்படி வெளிக்கொண்டு வந்து உபயோகபடுத்துவது என்று பார்போம்.
நீங்கள் உங்கள் கணினியின் wallpapers-ஐ மாற்ற desk top-இல் எதாவது ஒரு இடத்தில் right click செய்து அதில் தோன்றும் box-இல் personalize என்ற link-ஐ செய்வீர்கள். அப்போது ஒரு window கீழே உள்ளது போன்று open ஆகும்.
இதில் Aero Themes என்ற தலைப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள wallpapers-களின் தொகுப்பில் கடைசியாக united states என்று இருப்பதை பாருங்கள். இது போன்று Australia,Canada,Britain, South africa போன்ற நாடுகளுக்கு என்ற விசேசமாக wallpapers உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் hide ஆகி இருக்கும். சரி இவற்றை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று பார்போம்.
உங்கள் கணினியில் start button –ஐ click செய்யுங்கள். அதில் உள்ள search box –ல் C:\windows\globalization\MCT என்று type செய்து Enter கொடுங்கள். கீழே உள்ளது போன்று ஒரு window open ஆகும்.
இதில்
MCT-AU -AUSTRALIA
MCT-CA -CANADA
MCT-GB - BRITAIN
MAC-US -UNITED STATES
MCT-ZA -SOUTH AFRICA
முதலில் MCT-AU என்ற folder-ஐ cklick செய்யுங்கள் ;
அதில் theme என்று மற்றொரு folder இருக்கும் பாருங்கள் அதை கிளிக் செய்யுங்கள்;
அதில் AU என்ற short cut-ஐ double click செய்யுங்கள். இனி அந்த wallpaper தொகுப்பு உங்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் .இதை போன்று ஒவ்வொன்றிக்கும் செய்யுங்கள் .
1 comment:
நன்றிசார்.பயனுள்ள தகவல்.
வாழ்த்துக்கள்...
Post a Comment