Wednesday, July 14, 2010

Web pages; word files-ஐ pdf-ஆக சேமிக்க;

Portable document file என்பதன் சுருக்கமே pdf இதன் மூலம் படிக்கவும்; நமது file-ஐ பாதுகாப்பதும் மிகவும் easy, உதாரணத்திற்கு நான் .docx format-ல் ஒரு file-ஐ தயார் செய்து அதை என் நண்பருக்கு கொடுக்கிறேன் ஆனால் அவர் வேறொரு office application-ஐ உபயோகிறார்.so அந்த file-ஐ open செய்ய வேறொரு வழியை நாடவேண்டியிருக்கும்.இதற்கு பதிலாக நாங்கள் இருவரும் உபயோகிக்கும் ஒரு பொதுவான format-ல் மாற்றி கொடுத்தல் வேலையும் எளிது,நேரமும் மிச்சம் ஆகும். அதோடு மட்டுமில்லாமல் இந்த format-ல் மற்றொரு பயனும் உண்டு.அதாவது password கொடுத்து நமது file-ஐ பாதுகாக்கலாம்.



சரி இப்போது pdf file எப்படி உருவாக்குவது என்று பார்போம்.அதற்கு மென்பொருள் தேவை. இணையத்தில் எத்தனையோ pdf creators கிடைக்கின்றன. அதில் இலவசமாகவும், அதிக பயனுள்ளதாகவும் இருப்பது primo pdf maker.அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.அதை தரவிறக்கி install செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் word-ஐ open செய்து கொள்ளுங்கள்.உங்கள் data-வை type செய்து முடிந்ததும்,ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள். இனி file போய் print-ஐ click செய்யுங்கள்.கீழே உள்ளது போன்ற window open ஆகும்.



அதில் printerக்கு கீழே name என்ற இருப்பதை கவனியுங்கள் அதன் அருகில் உள்ள box-ல் உள்ள arrow button-ஐ click செய்யுங்கள். அதில் primo pdf என்ற option இருக்கும் அதை click செய்து O.K கொடுங்கள்.


மேலே உள்ளது போன்று ஒரு window open ஆகும்.அதில் documents properties-ல் change button-ஐ click செய்து Title,Author ,Subject போன்ற விவரங்களை கொடுக்கலாம்.pdf security என்பதை click செய்து நமது file-க்கு password கொடுக்கலாம்.save as என்பதில் உங்கள் file எங்கே save-ஆக வேண்டுமோ அந்த location-ஐ கொடுங்கள். எல்லாம் கொடுத்து முடிந்த பின்பு create pdf என்ற button-ஐ கிளிக் செய்யுங்கள்.உங்கள் file pdf-ஆக create விடும்.
உதாரணத்திற்கு நான் create செய்த தமிழ் pdf file-ஐ பாருங்கள்.


அடுத்ததாக வலை பக்கங்களை எப்படி pdf file-ஆக சேமிப்பது என்று பார்போம்.

நான் விக்கிபீடியாவில் டாவின்சி பற்றி படித்து கொண்டிருந்தேன்.அவரை பற்றி விவரங்கள் நிறையவே கொடுத்திருந்தார்கள்.ஆனால் முழுவதையும் online-ல் இருந்து படிப்பது என்பது சற்று சலிப்பு தரும் விஷயம்,அதை சேமித்து வைத்து கொண்டால் நம் விருப்படி எந்த நேரத்திலும் படிக்கலாம்.சரி அதை எப்படி உருவாக்குவது என்று பார்போம்.
இது ஒன்றும் புது முறை அல்ல மேலே சொன்ன அதே முறை தான்.நீங்கள் விரும்பும் வலை தளத்தை open செய்து கொள்ளுங்கள்.இனி உங்கள் browser-இன் மேலே உள்ள file என்பதை click செய்து print கொடுங்கள் (shortcut ctrl+p).

இனி மேலே சொன்ன அதே முறைகள் தான் சிறிய மாற்றம் கூட கிடையாது.நான் print செய்த விக்கிபீடியாவின் வலை பக்கம் கீழே உள்ளது.


Photobucket

Google Chrome :

Google ன்  உலாவியை பயன்படுத்துபவர்கள் control மற்றும் p அழுத்தி print பக்கத்தை open செய்து கொள்ளுங்கள்.அதில்  destination என்பதில் உள்ள  change என்ற button ஐ அழுத்தி  அதில் open  ஆகும் windows- ல் save pdf என்பதை செய்து கொள்ள்ளுங்கள்.





No comments: