Sunday, July 18, 2010

Folder;file-ஐ encrypt செய்ய;


அடுத்தவர்கள் பயன்படுத்த முடியாதவாறு நமது; folder; files-ஐ format செய்வது தான் encryption எனப்படும்.இதன் பயன் என்னவென்றால் சில companies; collages தங்களிடத்தில் வேலைசெய்பவர்கள், படிப்பவர்கள் போன்றோருக்கு கணிணியில் தனித்தனி user accounts open பண்ணி கொடுத்தீர்ப்பார்கள்,இதில் ஒரு user-ன் files-ஐ மற்றவர்கள் பார்க்கும் வகையில் தான் இருக்கும்.இதில் நமது சில personal file-களை மற்றவர்கள் ஏன்? Administrator கூட பார்க்க முடியாதவாறு செய்யலாம் அதற்கு Microsoft வழிவகை செய்கிறார்கள்.இதற்கு எந்தவொரு மென்பொருளும் தேவை இல்லை.



உங்களுடைய account-க்குள் login செய்து விட்டிர்களா.இனி நீங்கள் encrypt செய்ய விரும்பும் folder(file) –ஐ right click செய்து properties என்பதை select செய்யுங்கள்.அதில் advanced என்பதை click செய்யுங்கள்.கீழே உள்ளது போன்று ஒரு டயலாக் பாக்ஸ் open ஆகும்.
அதில் encrypt contents to secure data என்பதை tick செய்யுங்கள்.இனி o.k கொடுங்கள். அடுத்து open ஆகும் box-ல் apply கொடுங்கள். பின்வரும் box open ஆகும்.
அதில் apply changes to this folder,sub folders and files என்பதை செலக்ட் செய்யுங்கள்.o.k கொடுத்து வெளியேறுங்கள்.இனி உங்கள் folder-இன் பெயர் மற்றும் அதனுள் இருக்கும் files name green colour-ல் இருப்பதை காணலாம்.
இது உங்கள் folder encrypt-ஆகி விட்டது என்பதை குறிக்கிறது. இனி நீங்கள் logoff செய்து விட்டு போய்விடீர்கள் administrator அல்லது எதாவது ஒரு user வந்து உங்கள்
folder –இல் உள்ள file-ஐ பார்க்க முயற்சிக்கிறார்.அவருக்கு பின்வரும் பிழை செய்திகள் தான் கிடைக்கும்.
இந்த folder-இல் புதிதாக எந்தவொரு documents(pics or videos)-ஐ போட்டாலும் அது தானாக encrypt ஆகி விடும். நீங்கள் மட்டுமே இந்த file-களை பார்க்க முடியும்.எனக்கு folder வேண்டாம் தனிப்பட்ட ஒரு file மட்டும் encrypt ஆனால் போதும் என்றால் அந்த file-ஐ click செய்து மேலே உள்ள அதே rules-ஐ follow பண்ணுங்கள் போதும்.
சரி இதில் encryption சொல்லி விட்டீர்கள்,ஆனால் என்னுடைய folder-ஐ பிறர்(users&admins) பார்க்காத வகையில் hide பண்ணி வைப்பது எப்படி? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரு வழி இருகின்றது. என்னது properties போய் hide பண்ணலாமா? அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் எளிமையாக கண்டுபிடித்து விடுவார்கள்.அவர்கள் கண்களில் இருந்து மறைக்க மற்றொரு வழி இருகின்றது.அதற்கு நீங்கள் உங்கள் folder –ஐ private-ஆக அறிவிக்க வேண்டும். இதை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
அதற்கு முன்பு இதை decryption செய்ய folder-இன் properties போய் advanced என்பதை click செய்து encrypt content to secure data என்பதில் உள்ள tick-ஐ எடுத்து விடுங்கள்.இனி o.k கொடுத்து apply கொடுங்கள்.உங்கள் data decrypt ஆகிவிடும்.

No comments: