கணினியில் புதிதாக
இயங்குதளத்தை பதிய பொதுவாக நாம் CD/DVD Drive தான் பயன்படுத்துவோம். ஆனால் சில சமயங்களில்
CD/DVD Drive பழுதாகி இருக்கும் அல்லது நமது கணினியில் CD/DVD Drive இல்லாமல் இருக்கும்
ஆனால் நாம் புதியதாக இயங்குதளம் பதிய வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
இப்படிப்பட்ட
சூழ்நிலையில் நமக்கு இருக்கும் மாற்று USB வழி மூலம் இயங்குதளம் பதிவது. அதற்கு நாம்
பென்டிரைவ் வை Bootable பென்டிரைவ் வாக மாற்ற வேண்டும்.
விண்டோஸ்
இயங்குதளம்
இன்றய
பதிவில் லினக்ஸ் இயங்குதளத்தை பென்டிரைவ் மூலமாக கணினி வன்தட்டில் பதிய, பென்டிரைவ் - வை Bootable Pendrive -வாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்
முதலில் நீங்கள் எந்த லினக்ஸ் Distribution - பதிய விரும்புகிறிர்களோ அதை ISO கோப்பாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
பின்பு
Universal USB-Installer என்ற மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இதை கணிணியில் பதிய
வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இது ஒரு Portable மென்பொருள்.
தரவிறக்க
பின்பு
உங்கள் பென்டிரைவ் -ஐ கணிணியுடன் இணைத்து விடுங்கள் அதில் முக்கியமான கோப்புகள் இருந்தால்
அதை Backup எடுத்து விட்டு பென்டிரைவ்-ஐ Format செய்து கொள்ளுங்கள்
Universal
USB-Installer –ஐ Double Click செய்யுங்கள் புதியதாக ஒரு விண்டோ திறக்கும் அதில்….
Step:1
எந்த
லினக்ஸ் Distribution - பதிய விரும்புகிறிர்களோ அதை தேர்ந்தெடுங்கள்
Step:2
Browse
செய்து அதன் ISO கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்
Step:3
பென்டிரைவ் –ஐ தேர்வு செய்யுங்கள்
கடைசியாக
Create என்பதை Click செய்யுங்கள் அவ்வளவு தான் சில மணித்துளிகளில் Bootable
Pendrive தயாராகி விடும்.
(அடுத்து
வரும் பதிவுகளில் லினக்ஸ் இயங்குதளத்தில் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்)
No comments:
Post a Comment