Saturday, April 5, 2014

Posted by Vinoth John
No comments | 12:00 AM
கணினியில் புதிதாக இயங்குதளத்தை பதிய பொதுவாக நாம் CD/DVD Drive தான் பயன்படுத்துவோம். ஆனால் சில சமயங்களில் CD/DVD Drive பழுதாகி இருக்கும் அல்லது நமது கணினியில் CD/DVD Drive இல்லாமல்  இருக்கும் ஆனால் நாம் புதியதாக இயங்குதளம் பதிய வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு இருக்கும் மாற்று USB வழி மூலம் இயங்குதளம் பதிவது. அதற்கு நாம் பென்டிரைவ் வை Bootable பென்டிரைவ் வாக மாற்ற வேண்டும்.
விண்டோஸ் இயங்குதளம்
இன்றய பதிவில் லினக்ஸ் இயங்குதளத்தை பென்டிரைவ் மூலமாக கணினி வன்தட்டில் பதிய, பென்டிரைவ் - வை Bootable Pendrive -வாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்

முதலில் நீங்கள் எந்த லினக்ஸ் Distribution - பதிய விரும்புகிறிர்களோ அதை ISO கோப்பாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின்பு Universal USB-Installer என்ற மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். இதை கணிணியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இது ஒரு Portable மென்பொருள்.
தரவிறக்க

பின்பு உங்கள் பென்டிரைவ் -ஐ கணிணியுடன் இணைத்து விடுங்கள் அதில் முக்கியமான கோப்புகள் இருந்தால் அதை Backup எடுத்து விட்டு பென்டிரைவ்-ஐ Format செய்து கொள்ளுங்கள்
Universal USB-Installer –ஐ Double Click செய்யுங்கள் புதியதாக ஒரு விண்டோ திறக்கும் அதில்….

Step:1
எந்த லினக்ஸ் Distribution - பதிய விரும்புகிறிர்களோ அதை தேர்ந்தெடுங்கள்
Step:2
Browse செய்து அதன் ISO கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள்
Step:3
பென்டிரைவ் –ஐ தேர்வு செய்யுங்கள்
கடைசியாக Create என்பதை Click செய்யுங்கள் அவ்வளவு தான் சில மணித்துளிகளில் Bootable Pendrive தயாராகி விடும்.



(அடுத்து வரும் பதிவுகளில் லினக்ஸ் இயங்குதளத்தில் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்)

Friday, April 4, 2014

Posted by Vinoth John
No comments | 12:43 AM
புகைப்படம் எடுத்துக்கொள்வது அனைவருக்கும் மிகவும் பிடித்த விசயம். அதை விட எடுத்த புகைப்படத்தை அழகுப்படுத்துவது அனைவருக்கும் மிக மிக பிடித்த விசயம்.

புகைப்படம் எடுப்பது என்பது எளிமையான வேலை ஆனால் அதை எப்படி அழகுப்படுத்துவது ?

அதற்கு நீங்கள் போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும்.
போட்டோஷாப் கற்றுக்கொள்வது கடினமான காரியாமா? நிச்சயாமாக இல்லை ”சித்திரமும் கைப்பழக்கம்” தான்.

போட்டோஷாப் கற்றுக்கொள்ள நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே மிகவும் எளிமையாக நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு உங்களுக்கு ஓரு தளம் உதவுகின்றது.
மிகவும் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.




இந்த தளத்தை உருவாக்கய M.D கான் அவர்களது உழைப்பு அசாத்தியமானது. எவ்வித லாப நோக்கமும் இல்லாமல் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற உயரிய எண்ணததில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

வலை தள முகவரி

Thursday, April 3, 2014

Posted by Vinoth John
No comments | 12:34 AM
Sandisc Corporation அதிகளவு Cpacity கொண்ட MicroSDXC UHS-I –ஜ அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் கொள்ளவு 128 GB ஆகும். பிரத்தேகமாக Tablet PC மற்றும் SmartPhone–க்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் பல மணிநேரங்கள் ஓடக்கூடிய திரைப்படங்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.