Thursday, February 19, 2026

Bitten Apple : ஆப்பளின் அந்த "கடி"யின் உண்மை

 ஆப்பிள் நிறுவனத்தின் அந்த "கடிக்கப்பட்ட ஆப்பிள்" (Bitten Apple) லோகோ உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. இதில் பல கட்டுக்கதைகள் (Myths) உலவினாலும், உண்மையான காரணம் எளிமையானது.

என் கல்லூரி காலங்களில் ஒரு கதை பரப்பப்பட்டது. ஆப்பிளின் நிறுவனர் ஒரு முறை அந்த நிறுவனத்தின் லோகோ பற்றிய நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாக்களை கொடுத்தனர் யாருக்கும் ஒத்த உடன்பாடு ஏற்படவில்லை உடனே ஸ்டீவ்க்கு கோவம் வந்து தன் மேஜை மீது இருந்த ஆப்பிளை எடுத்து அதை ஒரு கடி கடித்து விட்டு இது தான் இனி என் நிறுவத்தின் லோகோ என்றாராம் உடனடியாக மற்ற அனைவரும் அதை ஒத்து கொண்டனராம். இப்படி ஒரு கதை உலாவியது.

இதை சொன்ன நண்பனிடம். இதெல்லாம் நம்பு மாதிரியா இருக்கு என்றேன்.

நம்புனாத்தான் டீ. நீ எப்படி கேண்டீன் வர்றியா ? என்றான்.

"நம்புறேன் "என்று நானும் அவனுடன் கேண்டீன் சென்று விட்டேன்.

ஒத்த "டீ"க்காக அந்த கதையை நம்பிட்டேன் இத்தன வருஷத்துக்கு அப்புறம் தான் உண்மை தெரியுது.

இந்த லோகோவை 1977-ல் வடிவமைத்தவர் ராப் ஜானோஃப் (Rob Janoff) என்ற கிராஃபிக் டிசைனர்.


Why The Bite ?

என் நண்பனை போன்று கதை கட்டிவிட்டவர்களின் அதிக நம்பகத்தன்மையை பெற்ற கதை இது தான். 

அந்த கடி கணினி உலகின் தந்தை ஆலன் ட்யூரிங் (Alan Turing) நினைவாக உருவாக்கப்பட்டது அவர் சயனைடு தடவிய ஆப்பிளைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த நினைவாகத்தான் ஸ்டீவ் தன் லோககோவை கடிக்கப்பட்ட ஆப்பிள் போன்று வைத்திருக்கிறார் என்று.

ஆனால், வடிவமைப்பாளர் ராப் ஜானோஃப் ஒரு நேர்காணலில் உண்மையான காரணத்தைக் கூறினார்:

அளவீடு (Scale): ஒரு ஆப்பிள் லோகோவை சிறியதாக மாற்றும்போது, அது பாக்குறதற்கு செர்ரி (Cherry) பழம் போலத் தெரிந்தது.அது செர்ரி அல்ல, ஆப்பிள் தான் என்பதை உறுதிப்படுத்த, அதன் ஒரு பகுதியை யாரோ கடித்தது போல வடிவமைத்தேன். கடித்த அடையாளத்தைப் பார்த்தவுடன் அனைவருக்கும் அது ஆப்பிள் என்பது சட்டென்று புரியும்.

இந்த லோகோ உருவான பிறகுதான் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை கவனிக்கப்பட்டது. கணினி மொழியில் தகவல்களின் அளவு 'Byte' (பைட்) என்று அழைக்கப்படுகிறது. லோகோவில் இருப்பது 'Bite' (கடி). இந்த 'Byte' மற்றும் 'Bite' என்ற வார்த்தை விளையாட்டு தற்செயலாக அமைந்தாலும், டெக் நிறுவனமான ஆப்பிளுக்கு இது கச்சிதமாகப் பொருந்தியது.

 Rainbow Colors

இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ஆப்பிள் லோகோ 6 வண்ணக் கோடுகளுடன் (Rainbow Stripes) இருந்தது.அப்போது ஆப்பிள் வெளியிட்ட 'Apple II' கணினிதான் முதன்முதலில் வண்ணத் திரையைக் (Color Display) கொண்ட தனிநபர் கணினி. அதை உலகிற்குத் தெரியப்படுத்தவே வண்ணமயமான லோகோ பயன்படுத்தப்பட்டது.

லோகோவின் பரிணாம வளர்ச்சி:

  1. 1976: நியூட்டன் மரத்தடியில் அமர்ந்திருக்கும் லோகோ (ரோனால்ட் வேய்ன் வரைந்தது).
  2. 1977 - 1998: வண்ணமயமான கடிக்கப்பட்ட ஆப்பிள்.
  3. 1998 - இன்று வரை: ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்த பிறகு, அதை இன்னும் எளிமையாக மாற்ற விரும்பி, தற்போதைய Solid Black/Silver/Grey நிறங்களுக்கு மாற்றினார்.

No comments: