Thursday, February 19, 2026

பில்லியன் டாலர் தவறுகள்: யாகூவின் வீழ்ச்சி

உன்கிட்ட ஒப்பனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினீஷிங் சரியில்லையே இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ யாகூக்கு சரியாக பொருந்தும்.

90-களின் இறுதியில் கூகுள், பேஸ்புக் போன்ற பெயர்களே இல்லாத காலத்தில், "இணையம் என்றால் அது யாகூ தான்" என்ற நிலை இருந்தது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் என்றாலும் தவறாக எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் கூட அந்த சாம்ராஜ்யத்துக்கு சாவு மணி அடித்துவிடுகின்றன அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் யாகூ…..

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தாங்கள் உருவாக்கிய 'BackRub') என்ற தேடல் நுட்பம் யாகூவிடம் விற்க வந்தனர் வெறும் 1 மில்லியன் டாலர்க்கு. எங்களிடமே சிறந்த தேடுபொறி இருக்கும் போது உங்கள் தேடு பொறி எங்களுக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பியது யாகூ. அவர்கள் நிராகரிந்த அந்த தேடுபொறி தான் இன்றைய இணைய அரசன் கூகுள்.


வாழ்க்கை எல்லோருக்கும் இன்னொரு வாய்ப்பையும் வழங்கும் அதே போன்று மற்றொரு பொன்னா வாய்ப்பு யாகூக்கு அமைந்தது 2002-ம் ஆண்டு மீண்டும் கூகுளை அணுகினர் யாகூ. அப்போது கூகிள் நிறுவத்தார் அதன் விலையாக 500 கோடி டாலரை நிர்ணயம் செய்தனர் ஆனால் யாகூ முன்னூறு கோடி தான் தருவேன் என்றது. அடுத்த வாய்ப்பையும் விட்டது யாகூ.

2006-ம் ஆண்டு பேஸ்புக் என்ற நிறுவனம் வளர்ந்து வருவதை கவனித்த யாகூ அதை வாங்க முன்வந்தனர். ஜுக்கர்பெர்க்கும் 1 பில்லியன் டாலர்க்கு அதை விற்க சம்மதித்தார். முதலில் ஒப்புக்கொண்ட யாகூ பின்னர் 850 மில்லியன் டாலர்களைத்தான் தருவேன் என்றது. ஜுக்கர்பெர்க் சம்மதிக்கவில்லை. அடுத்த வாய்பையும் இழந்தது யாகூ.

அட யார்டா நீ ?

யாகூவிடம் இருந்த மிகப்பெரிய பலவீனம் - அவர்களுக்குத் தாங்கள் யார் என்றே தெரியவில்லை.

அவர்கள் ஒரு தொழில்நுட்ப நிறுவனமா? அல்லது ஒரு ஊடக நிறுவனமா? என்ற குழப்பத்திலேயே இருந்தனர். கூகுள் 'தேடலில்' (Search) கவனம் செலுத்தியது, பேஸ்புக் 'சமூக வலைத்தளத்தில்' (Social Media) கவனம் செலுத்தியது. ஆனால் யாகூ செய்திகள், மின்னஞ்சல், விளையாட்டு என எல்லாவற்றிலும் கையை வைத்து எதிலுமே முதன்மையாக இருக்க முடியாமல் போனது.

2008-ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் யாகூவை 44.6 பில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்தது. அது யாகூவின் அப்போதைய மதிப்பை விட மிக அதிகம். ஆனால், யாகூவின் நிர்வாகம் "எங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதைவிட அதிகம்" என்று கூறி அந்த வாய்ப்பையும் தட்டிவிட்டது.

இறுதியில், ஒரு காலத்தில் 125 பில்லியன் டாலர் மதிப்புடன் இருந்த யாகூ, 2017-ல் வெறும் 4.48 பில்லியன் டாலருக்கு 'வெரிசோன்' (Verizon) நிறுவனத்திடம் விற்கப்பட்டது.

No comments: