Wednesday, February 18, 2026

தற்காலிக மின்னஞ்சல் Temp Email,Disposable Email

இன்றைய டிஜிட்டல் உலகில், நாம் ஒரு சாதாரண செய்தியைப் படிக்கவோ அல்லது ஒரு கோப்பை (File) பதிவிறக்கம் செய்யவோ நினைத்தால் கூட, அந்த இணையதளம் நமது மின்னஞ்சல் முகவரியைக் கேட்கிறது. இவ்வாறு எல்லா இடங்களிலும் நமது உண்மையான மின்னஞ்சலைக் கொடுப்பது பாதுகாப்பானதா? என்ற அச்சம் நமக்குள் இருக்கிறது இங்கே தான் 'தற்காலிக மின்னஞ்சல்' (Temp Email) முக்கியத்துவம் பெறுகிறது.

தற்காலிக மின்னஞ்சல் (Temp Email) என்றால் என்ன?

தற்காலிக மின்னஞ்சல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செயல்படும் ஒரு தற்காலிக முகவரி ஆகும். இதற்குப் பதிவு செய்யவோ, கடவுச்சொல் (Password) உருவாக்கவோ தேவையில்லை. வேலை முடிந்தவுடன் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு (உதாரணமாக 10 நிமிடம் முதல் 24 மணிநேரம் வரை) இந்த மின்னஞ்சல் தானாகவே அழிந்துவிடும்.


பிரபலமான தற்காலிக மின்னஞ்சல் தளங்கள்

1.Temp Mail

2.10 Minute Mail 

3.Guerrilla Mail

4.Mailinator

தற்காலிக மின்னஞ்சலைப் பயன்படுத்துவதன் நன்மைகள்:-

தனியுரிமை பாதுகாப்பு (Privacy):

தெரியாத அல்லது நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் நம் தனிப்பட்ட விவரங்களைப் பகிராமல் இருக்க இது உதவுகிறது. இதன் மூலம் நம்முடைய உண்மையான அடையாளம் மறைக்கப்படுகிறது.

சோதனை முயற்சிகள் (Testing):

மென்பொருள் உருவாக்குநர்கள் (Developers) தங்கள் செயலிகளைச் சோதிக்கப் பல மின்னஞ்சல் கணக்குகள் தேவைப்படும்போது, இதைப் எளிதாகப் பயன்படுத்தலாம்.

உடனடி சரிபார்ப்பு (Instant Verification):

புதிய ஆப்ஸ் அல்லது இணையதளங்களில் கணக்குத் தொடங்க வரும் 'Verification Link' அல்லது 'OTP'-க்களைப் பெற இது மிகவும் வசதியானது.

நன்மைகள் இருந்தாலும், சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்:

முக்கியமான கணக்குகளுக்குப் பயன்படுத்தாதீர்கள்: 

வங்கிச் சேவைகள், சமூக ஊடகக் கணக்குகள் (FB, Instagram) அல்லது அலுவலகப் பணிகளுக்கு இதைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில், ஒருமுறை அந்த மெயில் ஐடி அழிந்துவிட்டால், மீண்டும் உங்களால் அதைப் பெற முடியாது.

பாதுகாப்பு குறைபாடு: 

சில தற்காலிக மின்னஞ்சல் சேவைகள் பொதுவானவை (Public). அதாவது, ஒரே முகவரியை மற்றொருவர் அணுக வாய்ப்பு இருக்கலாம். எனவே ரகசியத் தகவல்களைப் பகிர வேண்டாம்.

No comments: