2004-ம்
ஆண்டு, லினக்ஸ் என்பது கணினி நிபுணர்களுக்கு (Geeks) மட்டுமே புரியும் ஒரு மொழியாக இருந்தது. "ஏன் ஒரு சாதாரண மனிதனால் லினக்ஸைப் பயன்படுத்த முடியாது?" என்ற கேள்வி ஒரு மனிதனுக்கு தோன்றியது தோன்றியது.
அதன் விளைவாக உருவானதுதான் உபுண்டு.
மார்க்
ஷட்டில்வொர்த்
மார்க்
ஷட்டில்வொர்த் ஒரு தென்னாப்பிரிக்க தொழில்முனைவோர், விண்வெளி சுற்றுலாப் பயணி மற்றும் லினக்ஸ் உலகின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். இவர் செப்டம்பர் 18, 1973 அன்று தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.
மார்க்
தனது 22 வயதிலேயே Thawte என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது இணையப் பாதுகாப்பு மற்றும் 'டிஜிட்டல் சான்றிதழ்கள்' (Digital
Certificates) வழங்கும்
நிறுவனமாகும். 1999-ம் ஆண்டு, இணையப்
புரட்சி ஏற்பட்ட காலத்தில், தனது நிறுவனத்தை VeriSign
நிறுவனத்திற்கு சுமார் 575 மில்லியன் டாலர்களுக்கு விற்றார். இதன் மூலம் மிக இளம் வயதிலேயே பெரும் கோடீஸ்வரரானார்.
மார்க்
ஷட்டில்வொர்த் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். தொழில்நுட்பத்தை லாபத்திற்காக மட்டும் பார்க்காமல், அது உலகிற்குச் செய்யும் நன்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்.
2000-களின்
தொடக்கத்தில், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Windows) சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. லினக்ஸ் (Linux) என்ற சிறந்த தொழில்நுட்பம் இருந்தாலும், அது சாதாரண மக்களுக்குப் புரியாத, கணினி நிபுணர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒன்றாக இருந்தது. "ஏன் ஒரு சிறந்த இயங்குதளம் அனைவருக்கும் இலவசமாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடாது?" என்ற கேள்வியே உபுண்டு பிறக்கக் காரணமாக அமைந்தது.
மார்க்க்
ஷட்டில்வொர்த் தனது திட்டத்தை ரகசியமாகத் தொடங்கினார். உலகம் முழுவதிலும் உள்ள திறமையான மென்பொருள் உருவாக்குநர்களைத் திரட்டி, "கான்னோனிகல்" (Canonical) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இந்தத் திட்டத்திற்கு அவர்கள் வைத்த பெயர் "Super-Secret-Debian-Derived-Project".
அவர்களின் முதல் பதிப்பிற்கு Warty
Warthog (தழும்புள்ள காட்டுப்பன்றி) என்று வேடிக்கையாகப் பெயரிட்டனர். மென்பொருள் என்பது வெறும் குறியீடுகள் அல்ல, அது மக்களுக்கானது என்பதை உணர்த்தவே ஆப்பிரிக்கத் தத்துவமான "உபுண்டு" என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.
"உபுண்டு"
'உபுண்டு'
என்ற சொல்லுக்கு ஆப்பிரிக்க மொழியில் "பிறர் மீது
காட்டும் மனிதாபிமானம்" என்று பொருள். ஒரு தனிமனிதனின் வெற்றி என்பது சமூகத்தின் வெற்றியைச் சார்ந்தது என்பதுதான் இதன் அடிப்படை. இந்தத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டே, மென்பொருள் மேதை மார்க்க் ஷட்டில்வொர்த் தான் உருவாக்கிய இலவச இயங்குதளத்திற்கு "உபுண்டு" என்று பெயரிட்டார்.
Free CDs
உபுண்டுவின் வளர்ச்சியில் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதி இதுதான். 2004-2011 காலகட்டத்தில் இணையம் இன்று போல வேகமானது அல்ல. ஒரு பெரிய மென்பொருளைப் பதிவிறக்கம் செய்வது கடினம். ஆனால் மக்களிடம் இந்த இயங்குதளத்தை
கொண்டு சேர்க்க வேண்டும்
அப்போது
மார்க்க் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். "ShipIt" என்ற திட்டத்தின் மூலம் உலகில் எந்த மூலையில் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு உபுண்டு சிடிக்களை (CDs) முழுக்க
முழுக்க இலவசமாக தபால் மூலம் அனுப்பினார். தபால் செலவு முதல் சிடி தயாரிப்பு வரை அனைத்தையும் அவரே ஏற்றார். இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதல்முறையாக கணினித் தொழில்நுட்பத்தை இலவசமாகப் பெற்றனர். இது உபுண்டுவை உலகப்புகழ் பெறச் செய்தது.
உபுண்டு உலகின் புகழ்பெற்ற பல சூப்பர் கம்ப்யூட்டர்களிலும், டெஸ்லா கார்களிலும், சர்வதேச விண்வெளி நிலையத்திலும் (ISS) பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனிமனிதனின் கனவு, "பகிர்வு" என்ற தத்துவத்தால் இன்று உலகையே இயக்கி வருகிறது.

No comments:
Post a Comment