கூகிள்ப்ளெக்ஸ் வளாகத்தின் புல்வெளிகள் மற்றும் வெளிப்புறப் பகுதிகள் வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், படைப்பாற்றலைத் தூண்டவும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள புல்வெளிகளைப் பராமரிக்க வழக்கமான புல் வெட்டும் இயந்திரங்களைப் (Lawn Mowers) பயன்படுத்தும்போது சில சிக்கல்கள் இருந்தன புல் வெட்டும் இயந்திரங்கள் அதிக சத்தத்தை உருவாக்கும். இது ஊழியர்களின் வேலைக்கு இடையூறாக இருந்தது மற்றும் இயந்திரங்கள் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்குவதால் கார்பன் வெளியேற்றம் (Pollution) ஏற்ப்பட்டது மேலும் காய்ந்த புற்கள் அதிகமுள்ள பகுதிகளில் இயந்திரங்கள் செல்லும்போது தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன.
இதற்க்கு தீர்வாக
கூகுள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தது கூகிள் இதற்காக 'California
Grazing' என்ற நிறுவனத்திடம் இருந்து சுமார் 200 ஆடுகளை வாடகைக்கு எடுத்து அதன் புல் வெளிகளில் மேயவிட்டது. ஒரு மேய்ப்பர் (Herder) மற்றும் அவரது எல்லைக் காவல் நாய் (Border Collie) உதவியுடன் இந்த ஆடுகள் புல்வெளியில்
மேயவிடப்படுகின்றன. ஆடுகள் புற்களை மேய்வது மட்டுமல்லாமல், இயற்கையான உரம் (Natural Fertilizer) மூலம் நிலத்திற்குச் சத்துக்களையும் வழங்குகின்றன. இயந்திரங்களைப் பராமரிப்பதை விட இந்த ஆடுகளுக்குத் தரும் வாடகை கூகிளுக்குப் பெரிய விஷயமாக தெரியவில்லை.
கூகிளின்
வித்தியாசமான இந்த ஆடு மேலாண்மை ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் (Stress Buster) விஷயமாக இருக்கிறது. அலுவலக ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது அமைதியாக ஆடுகள் மேய்ந்துகொண்டிருப்பது அவர்களுக்கு ஒரு கிராமப்புற உணர்வைத் தருகிறது. "இயந்திரங்களின் எரிச்சலூட்டும் சத்தத்தை விட, ஆடுகளின் சத்தம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது" எனப் பல ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment