நம் நாட்டில் பெரும்பாலும் உபயோகபடுத்தபடும் operating system, Microsoft தான்,ஆனால் தற்போது பெரும்பான்மையான கணினி வல்லுனர்களும், பொறியாளர்களும், அதிகமான security-ஐ விரும்புவர்களும், உபயோகபடுதுவது என்னவோ linux தான். ஆனால் நமது அரசாங்க பள்ளிகள்,அரசு அலுவலங்கள்,பெரும்பான்மையான தொழிற்சாலைகள்.பயன்படுத்துவது Microsoft-ன் operating system தான். அது மட்டுமல்ல புதிதாக கணினியை அறிந்து கொள்பவர்களுக்கு எளிமையாக இருப்பதும் windows தான். சரி விசயத்திற்கு வருவோம்.
நாம் கணினியில் வேலை செய்யும் போது பெரும்பான்மையான நேரங்களில் Mouse-ஐ தான் உபயோகபடுத்துவோம். சில முக்கியமான நேரங்களில் எதாவது பிரட்சனை ஏற்ப்பட்டு Mouse செயல் இழந்து போகும் அந்தமாதிரியான சமயங்களில் கணினியை உடைத்து எறியலாம் என்று தோன்றும் அவசரபடாதிர்கள் அதற்கும் ஒரு solution உண்டு. Mouse-ஐ உபயோகபடுத்தாமல் keyboard கொண்டே நாம் கணினியை operate பண்ணலாம்
Windows key-ஐ உபயோகபடுத்தி shortcut’s;
Winkey+B -அறிவிப்பு பகுதியை காட்டும்
Winkey+break -system propertiesஐ காட்டும்.
Winkey+D -desktop ஐ காட்டும்.
Winkey+F -search result window திறக்கும்
Winkey+F1 -Help and support center திறக்கும்.
Winkey+L -computer lock-ஆகி விடும்.
Winkey+M -திறந்திற்கும் எல்லா windows –ம் minimize-ஆகி விடும்
Winkey+R - Run box திறக்கும்.
Winkey+TAB -Task barல் உள்ள அடுத்த பொத்தான் முன்னிறுத்த படும்
Winkey+shift+TAB - Task barல் உள்ள முந்தய பொத்தான் முன்னிறுத்த படும்
Winkey+U -utility manager தோன்றும் .
Winkey+shift+M -undo minimize all windows என்ற கட்டளை செயல் படும்.
Alt key ஐ உபயோகபடுத்தி shortcut’s;
Alt+Enter -தேர்ந்து எடுக்கப்பட்ட பொருளின் properties-ஐ காட்டும்.
Alt+F4 -explorerஐ மூடிவிடும்; system shutdown பண்ண உதவும்.
Alt+leftarrow -நாம் பார்த்த முந்தய பகுதிக்கு செல்லும் (back shorcut).
Alt+rightarrow -அடுத்து பார்த்த பகுதிக்கு செல்லும் (next or forward shortcut)
Ctrl ஐ உபயோகபடுத்தி shortcut’s;
Ctrl+A -ஒரு பகுதயில் உள்ள அனைத்தையும் தேர்ந்து எடுக்க
Ctrl+C - தேர்ந்து எடுத்த பகுதியை copy செய்ய
Ctrl+V -copy செய்த பகுதியை மற்றொரு பகுதயில் paste செய்ய
Ctrl+X - தேர்ந்து எடுத்த பகுதியை cut செய்ய
Ctrl+Z -கடைசியாக செய்த செயல்பாட்டை தவிர்த்துவிடும் .
Functions keys;
F2 - தேர்ந்து எடுக்கப்பட்ட பொருளின் பெயர்மாற்ற
F3 -வேலை செய்து கொண்டிருக்கும் பகுதியில் find box ஐ காட்டும்
F4 -address bar-ஐ expand பண்ணும்.
F5 -refresh செய்ய
Shift+F10 –mouse ல் உள்ள right click –க்கு பதிலாக
Tab or F6 – mouse இல்லாமல் ஒரு பகுதியை select செய்ய இந்த buttons ஐ அழுத்தி arrow keys முலமாக operate பண்ணலாம் .
2 comments:
please add tamilish vote button
thanks for your advice mr.suthanthira
Post a Comment