Monday, July 12, 2010

Sony ericsson;Theme Creator;

இன்றைய நவீன உலகத்தில் cell phone என்பது இன்றியமையாத ஒரு சாதனம் ஆகிவிட்டது .Internet-ல் cell phone-க்கு தேவையான ringtones,themes, wall papers,அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றன.அப்படி கிடைக்கும் Themes-ல் இன்னொருவருடைய கற்பனையை தான் நாம் பெறுகிறோம், நம்முடைய cell phone-க்கு நாமே Themes create பண்ணினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.Internet-ல் இலவசமாக Themes create பண்ண எண்ணற்ற இணைய தளங்கள் உள்ளன.ஆனால் இணைய இணைப்பு இல்லாமல் மென்பொருள் கொண்டு நம்முடைய cell phone-க்கு Themes create பண்ண Sony ericsson company இலவச மென்பொருள் தருகிறார்கள்.அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.



இந்த மென்பொருளை insatall செய்தவுடன் உங்கள் cell phone-ன் மாடல் கேட்கும்,கீழே உள்ள படத்தை பாருங்கள்.


என்னுடைய cell phone Z550 நான் அதை select பண்ணிருக்கேன். Select செய்தவுடன் நமது cell phone–ன் model-க்கு ஏற்றவாறு.creation window open ஆகும்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை,அதில் என்னென்ன கேட்கிறார்களா,அதற்கு தகுந்த அளவுகளில் Images,names போன்றவற்றை கொடுங்கள்.

மேலே படத்தில் உள்ளபடி tabs இருக்கும் ஒவ்வொன்றையும் click பண்ணி அதில் நீங்கள் விரும்புகின்ற images-ஐ import செய்யுங்கள். இதில் sounds என்பது click செய்து நீங்கள் உங்கள் themesக்கு விரும்புகின்ற ringing tones, message tones, போன்றவற்றை கொடுங்கள்,கடைசியாக author என்பதை click செய்து உங்கள் name, e-mail id , வலை தள முகவரி போன்றவற்றை கொடுக்கலாம் ஆனால் இது கட்டாயம் இல்லை. எல்லாம் செய்து முடித்துவிட்டீர்கள், இனி நீங்கள் தயாரித்த theme எப்படி இருகின்றது என்று பார்க்க விரும்பினால் மேலே preview என்ற tab இருக்கும் அதை click செய்து பார்க்கலாம், அதில் எதாவது மாற்றம் செய்ய விரும்பினால் நீங்கள் செய்து கொள்ளலாம்.

எல்லாம் செய்து முடித்துவிட்டீர்கள் என்றால் file-ஐ click செய்து save பண்ணிகொள்ளுங்கள் உங்கள் cell phone –க்கு தகுந்த format-ல் அது தானாக save ஆகி கொள்ளும்.இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் வேறு எதாவது ஒரு theme-ஐ உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு edit செய்து கொள்ளலாம்.அதற்கு file-ஐ click செய்து open என்ற tab-ஐ click செய்யுங்கள் நீங்கள் save பண்ணி வைத்துள்ள theme-ஐ open செய்து edit பண்ணிகொள்ளுங்கள் .

குறிப்பு;
ஒவ்வாரு model cell phone-க்கு தகுந்தவாறு creation window-ல் உள்ள options வேறுபடும்.

Photobucket

No comments: