Tuesday, July 13, 2010

I’Q Games;

விளையாட்டுகள் என்பது நம் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லாமல்,நம் அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாம் பெரும்பாலும் விளையாடும் கணினி விளையாட்டுகளின் memory-ன் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்,அத்தகைய விளையாட்டுகளை விளையாடும் போது நாம் கணினியில் மற்ற வேலைகள் ஏதும் செய்ய முடியாது. ஆனால் சில சமயங்களில் மிகச்சிறிய அளவுடைய விளையாட்டுகள் பெரிய விளையாட்டுகளை விட மிகவும் சுவாரசியமாக மட்டுமில்லாமல் நம் அறிவை வளர்ப்பதாகவும் அமைந்து விடும்.அதை போன்று சில flash games.



Game 1;

ஒரு இரவு பொழுதில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஓன்று ஆற்றை கடக்க முயற்சிக்கிறார்கள்.அவர்களிடம் ஒரே ஒரு விளக்கு மட்டும் உள்ளது.அதுவும் சரியாக 30 sec மட்டும் எரியும்,ஒரே சமயத்தில் இருவர் மட்டும் ஆற்றை கடக்க முடியும்,பின்னர் ஒருவர் திரும்பி வந்து மற்றொருவரை அழைத்து செல்ல வேண்டும்,அதில் ஒருவர் 1sec,பாலத்தை கடப்பார் மற்றவர்கள் முறையை 3sec,6sec,8sec,12sec,குள் பாலத்தை கடப்பார்கள். சரியாய் 30 sec-குள் அனைவரையும் ஆற்றை கடக்க வைக்க வேண்டும்.முயற்சித்து பாருங்கள்.

Photobucket

Game 2;

ஒரு குதிரை வீரன் ஒரு கோட்டையில் இருந்து மற்றொரு கோட்டைக்கு செல்ல முயற்சிக்கிறார் ஆனால் நடுவே ஒரு பிரச்சனை அவருக்கு காத்திருக்கிறது மொத்தம் 14 தூண்கள் கோட்டைகளுக்கு இடையே இருக்கிறது அதில் அந்த வீரர் chess board-ல் செல்லும் குதிரையை போன்று L shape-ல் செல்ல வேண்டும்.ஒரு முறை நின்ற தூணில் மறுமுறை வர முடியாது. அவர் அந்த தடையை கடக்க உதவுங்கள்.


Photobucket

Game 3;

ஒரு கட்டிடத்தில் உள்ள ஐந்து வெவ்வேறுlift-களில் ஐந்து பேர் மாட்டிகொண்டர்கள்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு floor-ல் இருக்கிறார்கள் ,இதில் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் அனைவரும் 21-க்கும் 25-க்கும் இடைப்பட்ட floor-களில் நின்றால் lift door தானாக திறந்து விடும்,நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு lift களை மேலயோ அல்லது கீழையோ operate பண்ணலாம்.up buttonனை அழுத்தினால் 8 floor மேலை சென்று விடும் down button னை அழுத்தினால் 13 floor கீழே இறங்கி விடும், இதை பயன்படுத்தி ஐந்து பேரையும் lift ஐ விட்டு வெளிக்கொண்டு வரவேண்டும்.

Photobucket



பிடித்திருந்தால் ஒரு vote போடுங்கள்

No comments: