Wednesday, June 6, 2012

Parental control ; Windows 7


Windows 7 –இல் உள்ள ஒரு அற்புதமான ஓன்று parental control.இதன் மூலம் உங்கள் குழநதைகள் கணினியில் செலவிடும் நேரத்தை கட்டுப் படுத்தலாம்.அவர்கள் உபயோகபடுத்தும் software’s மற்றும் games,websites என்று அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.இது third-party software கிடையாது.windows 7 இல் default ஆக இருக்கிறது.இது desktop administrator ஆக பணிபுரிபவர்களுக்கும்  உபயோகமான ஓன்று.

இதை உபயோகிக்கும் முன்பு உங்கள் கணினியில் கண்டிப்பாகஉங்கள் account administrator ஆக இருக்கவேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் accounts எல்லாவற்றிக்கும் password கொடுத்து இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் accounts users limit-இல் தான் இருக்க வேண்டும்.


என்னென்றால் administrator account-இல் இருந்து தான் users-ஐ கட்டுபடுத்த முடியும் உங்கள் குழந்தைகளின் accounts-ம் administrator-ஆக இருந்தால் அவர்கள் எளிதாக violate செய்து விடுவார்கள் அதோடு இல்லாமல் உங்கள் accounts-அவர்கள் கட்டுபாட்டில் கொண்டு சென்று விடுவார்கள்(இன்றைய குழந்தைகள் அதி புத்திசாலிகள்).

Start à control panel à parental control –ஐ open செய்து கொள்ளுங்கள்.அதில் உங்கள் accounts பட்டியல் இட்டு காட்டப்பட்டு இருக்கும்.அதில் நீங்கள் எந்த account –ஐ control செய்ய போகிறிர்களோ அதை கிளிக் செய்யுங்கள்..


படத்தில் இரண்டு accounts இருக்கிறது john என்பது administrator மற்றும் sam என்பது user.இதில் நான் sam account-ஐ control செய்ய போகிறேன் எனவே அதே கிளிக் செய்கிறேன்.

முதலில் parental control off-இல் இருக்கும் அதை on செய்யுங்கள்.

மூன்று options இங்கு இருக்கும்

1.Time Limits

2.Games

3.Allow and Block Specific Programs.

Time Limits;

இதில் உங்கள் குழந்தைகள் எவ்வளவு  நேரம் கணினியை உபயோக படுத்தலாம் என்று time limit set பண்ணலாம்.

எந்தந்த நேரத்தை எல்லாம் block செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை time slot –இல் mosue –இன் left click செய்து select பண்ணுங்கள்.நீங்கள் select செய்த இடம் blue colour-இல் இருக்கும்.வெள்ளை நிறத்தில் உள்ள இடம் நீங்கள allow செய்த time அதில் மட்டும் தான் உங்கள் குழந்தைகளின் account work ஆகும்.

இதை நீக்க மறுபடியும் அதே இடத்தில mouse வைத்து கிளிக் செய்யுங்கள்.

Games;

இங்கே நீங்கள் computer games-ஐ முற்றிலுமாக block செய்து கொள்ளலாம்..அல்லது குறிபிட்ட games-ஐ அதன் rating அடிப்படையில் block செய்யலாம்..கேம் rating என்பது ,  ESRB  (Entertainment Software Rating Board.)CERO(Computer Entertainment Rating Organization ) etc..போன்றவற்றை பொறுத்தது இதில் நீங்கள் எதை சார்ந்து games-block செய்யபோகிறீர்கள் என்பதை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள்.




இது மட்டும் மல்ல games இன் type of content –ஐ பொருத்தும் நீங்கள் block செய்யலாம் உதாரணமாக alcohol based ,cartoon violence ,blood போன்றவற்றை பொருத்தும் நீங்கள் games-block செய்யலாம்.



Control programs ;

இதன் மூலம் நீங்கள் உங்கள் கணினியில் உள்ள other applications or software’s-ஐ  உங்கள் குழந்தைகளுக்கு allow அல்லது block செய்யலாம்.இதை நீங்கள் open செய்யும் போது இரண்டு options இருக்கும்.

1.can use all programs
2.can only use the programs I allow  







முதல் option –ஐ தேர்வு செய்தால் உங்கள் குழந்தையால் எல்லா applications-use பண்ண முடியும்.

இல்லை சில முக்கியமான softwares-block செய்ய வேண்டும் என்றால் இரண்டாவது option ஐ தேர்வு செய்து, அதில் உங்கள் குழந்தைகள் என்னென softwares உபயோகபடுத்த வேண்டுமோ அதை மட்டும் தேர்வு செய்து ok கொடுங்கள் .





2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவல் ! விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

Vinoth John said...

வருகைக்கு நன்றி தனபாலன் sir,