பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன engineering college counselling இன்னும் சில நாட்களில் ஆரம்பித்து விடும். நம்மில் பல இளைஞர்களுடைய கனவு என்ன தெரியுமா ? IIT-இல் படிப்பது ஆனால் அது சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
சரி அப்படி IIT-இல் என்னதான் இருக்கிறது ?படிப்பு முடிந்தவுடன் பெரிய company களில் வேலை.சரி அப்புறம் ? சிறந்த தொழில் நுட்ப ஆய்வக வசதி..ஆனால் இது மற்ற சிறந்த Engineering college-களிலும் கிடைக்குமே.
மிக முக்கியமான ஓன்று Lectures..IIT- பணிபுரியும் திறமையான ஆசிரியர்கள்..அவர்களுடைய Lectures.அதுதான் முக்கியம்..இது IIT-இல் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு எட்டாத கனியாக மாறிவிடுகிறது..
NPTEL(National Programme on Technology Enhanced Learning).இவர்களது இணையத்தளத்தில் IIT ஆசிரியர்களின் Lectures ஐ, video ஆக நமக்கு தருகிறார்கள் அதுவும் முழுவதும் இலவசமாக.
பொறியியல் துறை சார்ந்த அனைத்து departments-கும் அதை சார்ந்த பாடங்களுக்கும் மிகவும் திறமையான ஆசிரியர்களால் எடுக்கப்பட்ட வகுப்புகள் இங்கே video ஆக இருகின்றன..அவற்றை online-இல் பார்த்தும் படிக்கலாம் தேவைபட்டால் download-ம் செய்து கொள்ளலாம்..இது பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு(சில பொறியியல் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களுக்கும்) மிக ,மிக முக்கியமான ஓன்று.
No comments:
Post a Comment