நண்பன் திரைபடத்தில் கல்லூரி பேராசிரியராக வரும் சத்யராஜ் ஒரு super ஆன வசனத்தை படத்தில் பேசி இருப்பார்..படத்தில் ஒரு scene இல் சத்யராஜ் மாணவர்களை பார்த்து கேட்பார் நிலவில் முதன் முதலில் கால் பதித்தவர் யார் ?.எல்லோரும் Neil Armstrong என்று சொல்வார்கள் சரி அப்படியானால் இரண்டாவது கால் பதித்தவர் யார் ? என்று கேட்பார் யாருக்கும் தெரியாது.so இந்த உலகம் முதன் முதலில் யார் வருகிறார்களோ அவர்களை தான் நியாபகம் வைத்து இருக்கும் இரண்டாவது வருபவர்களை மறந்து விடும் என்று சொல்லுவார் .நிலவில் இரண்டாவது கால் பதித்தவர் buzz Aldrin (உலகம் அவரை நியாபகம் வைத்திருக்கிறது சத்யராஜ் சார் )
சரி தான் sir,எல்லோரும் முதலில் வருவோரை தான் நியாபகம் வைத்து இருப்பார்கள் என்றால் இன்றைய இளைய தலைமுறையிடம் உலகின் முதல் portable computer எது ? முதல் operating system எது ? முதல் hard disc –இன் capacity என்ன என்று கேட்டு பாருங்கள். தெரியாது என்ற பதில் தான் நெறைய பேரிடம் இருந்து வரும்.ஆனால் latest technology பற்றி கேட்டுபாருங்கள். தெளிவாய் சொல்லுவார்கள். காரணம் கேட்டால் புதுசு புதுசா உலகம் மாறிக்கொண்டு இருக்கும் போது பழசை யார் தான் நியாபகம் வைத்து இருபார்கள்? அது நமக்கு தேவை தானா என்று கேட்பார்கள்.
என்னை கேட்டால் இது ஒரு தவறான கருத்து.ஒரு விசயத்தை நாம் கற்றுகொள்ள வேண்டும் என்றால் அதை பற்றிய அடிப்படை விசயங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்..அப்போது அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்..
இனி வரும் காலங்களில் இதை பற்றி பதிவுகளாக எழுதலாம் என்று எண்ணி இருகிறேன்..இதற்கு உங்களுடைய support எனக்கு தேவை.
support என்றால் ஒரு சின்ன பாராட்டு ,ஒரு பின்னூடம், முடிந்தால் அறிவுரைகள் இவைகள் தான் எங்கள் ஊக்க மருந்துகள்.உங்களுடைய மேலான ஆதரவை நான் எப்போதும் எதிர் பார்க்கிறேன்.
முதலில் apple-இல் இருந்து ஆரம்பிப்போம் ;
ஆப்பிள் நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ,அந் நிறுவனத்தின் products –ஐ பயன்படுத்துவதே ஒரு பெருமைக்குரிய விஷயம், ஆப்பிள் நிறுவனத்தின் ipad, ipod போன்றவை இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.சரி அந் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
அதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தி உருவாக்கியவர் யார் ?
steve Jobs என்று நீங்கள் சொல்வது கேட்கிறது,அவர் மட்டும் அல்ல அவருடன் இணைந்து steve wozniak , Ron wayne இவர்களால் தான் 1976 April 1 –ம் நாள் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கப் பட்டது(முட்டாள்கள் தினம் என்று உலகம் கொண்டாடும் தினத்தில் தான் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானான apple உருவாக்கி இருக்கிறது).
Left to right: steve jobs, ron wayne, steve wozniak
இதில் steve wozniak தான் ஆப்பிள்-ன் முதல் product- ஆன APPLE I –ஐ உருவாக்கியவர். அதற்கு operation manual எழுதும் பொறுப்பு ron wayne குரியது . steve jobs க்கு அதை advertisement செய்ய வேண்டிய பொறுப்பு.
படத்தில் இருப்பது தான் இவர்கள் உருவாக்கிய முதல் APPLE I கணினி.
Apple I Specifications:
Processor: MOS Technology 6502 processor running at 1.023 MHz.
Memory: Came with 4k RAM (expandable to 8k, 65k with clever hack).
Ports: any standard ASCII keyboard that could be installed ,and any monitor.
Display: frame rate of 60.05 Hz, could support 40 characters per line at 24 lines, with
automatic scrolling.
Operating
System: Woz built the Apple I to run BASIC
இதன் விலை என்ன தெரியுமா? $666.66 .இன்றைய மதிப்பில் 37,180 ருபாய்.
ஆப்பிள் Logo அன்று முதல் இன்று வரை ;
தொடரும் ;
No comments:
Post a Comment