உலகின் மிகச்சிறந்த இணைய உலாவிகளில் முதன்மையானது குகூள் குரோம். பிரவுசிங் என்றாலே நம் மைவுஸ் கர்சர் தானாகவே குரோம் ஐகானை நோக்கி சென்று விடும் அந்த அளவுக்கு நம்மோடு ஒன்றிணைந்து விட்டது குகூள் குரோம். என்னத்தான் அவர்கள் சேவை சிறப்பானதாக இருந்தாலும் சில சமயங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சமீபத்தில் McAfee நிறுவனம் ஒரு இணைய பாதுகாப்பு சம்பந்தமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள் அதில் Google Chrome Web Store மிக மோசமான Malware Extensions கள் இருப்பது கண்டறிப்பட்டது.
- Netflix Party
- FlipShope — Price Tracker Extension
- Full Page Screenshot Capture — Screenshotting
- AutoBuy Flash Sales
இந்த Extensions சுமார் 20000 த்தில் இருந்து 1400000 வரை பதிவிறக்கங்கள் கொண்டதாக இருக்கின்றன. அந்த Extensionகள் பயனாளர்களின் தகவல்களை தங்கள் சர்வர்க்கு அனுப்புவதுடன் வணிக நோக்கம் கொண்ட URL-களை உட்புகுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுவாரஸயமான விசயம் என்னவென்றால் சில Extensions கள் நிறுவியவுடன் தங்கள் வேலையை காட்டுவதில்லை அப்படி காட்டும் போது எங்கே தாங்கள் மாட்டிக்கொள்வோமா என்ற பயத்தில் அமைதியாக இருந்துவிட்டு 15 நாட்கள் கழித்து தங்கள் வேலையை காட்ட தொடங்குகின்றன. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் McAfee திரட்டியுள்ளது.
Third-Party எக்டன்ஷன்கள் வாங்கினாத்தான் இந்தப்பிரட்சனை என்றுப் பார்த்தால் இப்போது குரோம் ஸ்டோரிலும் இந்த மாதிரியான பிரட்சனைகளை கண்ட பயனாளர்கள், " என்னம்மா! இப்படி பண்றிங்களே மா.." என்று புலம்பத் தொடங்கியுள்ளனர்
குகூள் நிறுவனம் Manifest V3 என்ற தொழில்நூட்பத்துடன் தீங்கிழைக்கும் இந்த நீட்டிப்புகளை கண்டறிந்து நீக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. Manifest V3 -ல் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் பயனாளர்கள், எந்த வலைதளத்தில் Extensions இயங்க வேண்டும் என்பதை தாங்களாகவே தீர்மானிக்கலாம்.
முதற்கட்டமாக தற்ப்போது 80000 பயனாளர்களை கொண்டிருந்த Netflix Party extension என்ற நீட்டிப்பு குகூள் குரோம் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. மற்ற தீங்கிழைக்கும் நீட்டிப்புகளை நீக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாக குகூள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கூறப்பட்ட நீட்டிப்புகளை பயனாளர்கள் உடனடியாக தங்கள் உலாவியில் இருந்து நீக்குமாறு அறிவுறித்தியுள்ளது.
No comments:
Post a Comment