Friday, September 2, 2022

Mount ISO Image on Windows 11

 

ISO என்பது கோப்புகளை பாதுகாக்கும் ஒரு தொழில்நூட்பம். நமது கணிணியில் உள்ள முக்கியமான கோப்புகள் அனைத்தையும் பென்டிரைவ் அல்லது ஹார்டுடிஸ்க் போன்றவற்றில் Backup செய்து வைப்போம். சில வருடங்களுக்கு முன்னால் CD/DVD களில் Backup செய்து வைப்பார்கள். நமக்கு தேவைப்படும் நேரங்களில் அந்த கோப்புகளை எடுத்து பயன்படுத்துவோம். CD/DVD களில் Backup செய்வதில் உள்ள விர்ஷுவல் முறை தான் ISO.

புரியும் படியாக சொல்வதென்றால் முன்பெல்லாம் CD/DVD Pouch என்று ஒன்று வைத்திருப்போம். நாம் Backup செய்யும் CD/DVD களை அதில் வரிசைப்பிரகாரம் அழகாக அடுக்கி வைத்திருப்போம். அதே போன்ற அமைப்பை நமது ஹார்டிஸ்க்கில் செய்தால் ?.


நாம் Backup செய்ய விரும்பும் அனைத்து கோப்புகளையும் ஒவ்வொரு CD/DVD களாக மாற்றி வைத்திருந்தால் எப்படி இருக்கும். அது தான் ISO image அல்லது ISO file.

Thursday, September 1, 2022

எச்சரிக்கை குகூள் குரோமில் மால்வேர்

 

உலகின் மிகச்சிறந்த இணைய உலாவிகளில் முதன்மையானது குகூள் குரோம். பிரவுசிங் என்றாலே நம் மைவுஸ் கர்சர் தானாகவே குரோம் ஐகானை நோக்கி சென்று விடும் அந்த அளவுக்கு நம்மோடு ஒன்றிணைந்து விட்டது குகூள் குரோம். என்னத்தான் அவர்கள் சேவை சிறப்பானதாக இருந்தாலும் சில சமயங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சமீபத்தில் McAfee  நிறுவனம் ஒரு இணைய பாதுகாப்பு சம்பந்தமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள் அதில் Google Chrome Web Store மிக மோசமான Malware Extensions கள் இருப்பது கண்டறிப்பட்டது.

  • Netflix Party
  • FlipShope — Price Tracker Extension
  • Full Page Screenshot Capture — Screenshotting
  • AutoBuy Flash Sales

Saturday, April 5, 2014

Install Linux via USB in Tamil

கணினியில் புதிதாக இயங்குதளத்தை பதிய பொதுவாக நாம் CD/DVD Drive தான் பயன்படுத்துவோம். ஆனால் சில சமயங்களில் CD/DVD Drive பழுதாகி இருக்கும் அல்லது நமது கணினியில் CD/DVD Drive இல்லாமல்  இருக்கும் ஆனால் நாம் புதியதாக இயங்குதளம் பதிய வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு இருக்கும் மாற்று USB வழி மூலம் இயங்குதளம் பதிவது. அதற்கு நாம் பென்டிரைவ் வை Bootable பென்டிரைவ் வாக மாற்ற வேண்டும்.

Friday, April 4, 2014

Learn PhotoShop in Tamil:

புகைப்படம் எடுத்துக்கொள்வது அனைவருக்கும் மிகவும் பிடித்த விசயம். அதை விட எடுத்த புகைப்படத்தை அழகுப்படுத்துவது அனைவருக்கும் மிக மிக பிடித்த விசயம்.

புகைப்படம் எடுப்பது என்பது எளிமையான வேலை ஆனால் அதை எப்படி அழகுப்படுத்துவது ?

அதற்கு நீங்கள் போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும்.
போட்டோஷாப் கற்றுக்கொள்வது கடினமான காரியாமா? நிச்சயாமாக இல்லை ”சித்திரமும் கைப்பழக்கம்” தான்.

Thursday, April 3, 2014

World’s highest Capacity Micro SDXC:

Sandisc Corporation அதிகளவு Cpacity கொண்ட MicroSDXC UHS-I –ஜ அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் கொள்ளவு 128 GB ஆகும். பிரத்தேகமாக Tablet PC மற்றும் SmartPhone–க்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் பல மணிநேரங்கள் ஓடக்கூடிய திரைப்படங்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

Friday, September 27, 2013

How to Download YouTube Videos /Movies

பல பயனுள்ள வீடியோ மற்றும் படங்கள்  youtube -ல்  இருகின்றன.

 youtube பொறுத்தவரை நாம் அந்த வீடியோக் களை ஆன்லைன்ல பார்க்கலாம் ஆனால் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது.

அத்தியாவசமான படங்களை கணினியில் பதிவிறக்கம் செய்வது என்பது பற்றியது இந்த பதிவு.
இரண்டு முறைகளில் நாம் பதிவிறக்கம் செய்ய முடியும் ஓன்று மென்பொருள் முலமாக மற்றொன்று online இணையம் வழியாக.

Monday, June 25, 2012

Tamilnadu M.L.As Information's

நம் தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள்ர்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு இணைய தளம் உதவுகின்றது.உங்கள் தொகுதி M.L.A(Member of Legislative Assembly) யார் என்று கேட்டால் நாம் சொல்லிவிடுவோம்(பல பேருக்கு தெரியாது).நமது மாவட்டத்தில் உள்ள M.L.A யார் ? யார் ? என்று கேட்டால் தெரியாது என்ற பதில் தான் பல பேரிடம் இருந்து வரும்.சரி நமது தொகுதியின் M.L.A பற்றி விவரங்கள் பற்றி கேட்டால் ? அவரது முகவரி , அலுவலக தொலை பேசி எண்கள் , மின் அஞ்சல் முகவரி போன்றவை நமக்கு தெரிய வாய்ப்பில்லை.