Wednesday, October 20, 2010

HARDWARE PROFILES:

ஹாய் FRIENDS இன்று இந்த பதிவில் Microsoft operating system-இல் உள்ள hardware profiles என்ற application ஐ பற்றி பார்க்க போகிறோம்..ok நம்முடைய mobile phone இல் profiles ஐ எதற்காக பயன் படுத்துகிறோம்..நாம் இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு நம்முடைய வசதிக்கு ஏற்ப cell phone இன் settings –ஐ மாற்றி அமைக்கிறோம்..அந்த இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு நம் cell phone-இன் மற்றொரு profile-ஐ பயன்படுத்துகிறோம்..அதை போன்று தான் நமது கணினியிலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கணினியின் சில வசதிகளை(hard ware) மட்டும் enable செய்து விட்டு மற்றவற்றை disable செய்து வைத்து கொள்ளலாம்...இது பெரும்பாலும் laptop வைத்து இருப்பவர்களுக்கு பெரிதும் பயன் படும்..


(Examble) office செல்லும் போது தனது வேலைக்குச் சம்பந்தமான hardwares –ஐ மட்டும் enable செய்து வைத்து தேவை இல்லாததை disable செய்து வைத்து கொள்ளலாம்..உதாரணமாக நீங்கள் office செல்லும் போது பெரும்பான்மையாக headphone தேவை படாது so அதை office என்ற profile இல் disable செய்து வைத்து கொள்ளலாம்...பிறர் நம் கணினியை பயன்படுத்தும் usb-ஐ disable செய்த profile-இல் அவர்களிடம் கொடுக்கலாம்...சரி இதை சாதரணமாக நாம் computer settings லே செய்யலாமே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது..ஆனால் நீங்கள் ஒவ்வொரு தடவையும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு settings ஐ மாற்றி கொண்டு இருப்பதை விட ஒவ்வொரு சூழ்நிலைக்கு தகுந்தவாறு profiles create செய்து வைத்து கொண்டு அந்தந்த சூழ்நிலை வரும் போது அதற்கு தகுந்த profile(settings)-இல் நம் கணினியை இயங்க செய்யலாம்....சரி இதன் பயன் என்ன ? system performance அதிகரிக்கும் மின்தேவை குறையும் laptop வைத்து இருபவர்களுக்கு battery backup நீடிக்கும்...



சரி இதை எப்படி செய்யலாம் சென்று பார்போம் ;

Windows xp;

My computerஐ right click செய்து system properties-ஐ தேர்வு செய்யுங்கள்..அதில் hardware என்ற tab –ஐ தேர்வு செய்யுங்கள்..தோன்றும் window-இல் hard ware profiles என்ற tab ஐ click செய்யுங்கள்..


அதில் default ஆக ஒரு profile create ஆகி இருக்கும்..புதிதாக ஒரு profile create பண்ண வேண்டும் என்றால் அதில் default profile-ai select செய்து கொள்ளுங்கள் பின்னர் கீழே உள்ள copy என்ற tab click செய்யுங்கள்..புதிய profile create செய்வதற்கான window open ஆகும் அதில் profile –காண name-ஐ கொடுத்து ok கொடுங்கள்..


புதிய profile create ஆகி விட்டது..இதை போன்று னங்கள் எத்தனை profile வேண்டும் என்றாலும் create பண்ணி கொள்ளலாம்...சரி profile create பண்ணியாச்சு இனி ஒவ்வொரு profile கும் தனித்தனியாக settings அமைக்கவேண்டும் அதற்கு நீங்கள் அந்த profile-குள் enter ஆக வேண்டும் ..உங்கள் கணினியை off செய்து விட்டு மறுபடியும் on செய்யுங்கள் system boot ஆகும் போது நீங்கள் இந்த profile குள் செல்ல விரும்புகிறிர்கள் என்று கேட்கும் அதை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான profile குள் சென்று விடுங்கள்...



இனி தேவை இல்லாத hardwares ஐ disable செய்ய mycomputer properties சென்று hardware-இல் உள்ள device manager என்பதை open செய்து கொள்ளுங்கள் அதில் நீங்கள் disable செய்ய நினைக்கும் hardware மீது right click செய்து disble செய்து விடுங்கள் இந்த settings நீங்கள் தற்போது இருக்கும் profile க்கு மட்டும் தான் பொருந்தும்...ஒவ்வொரு profile குள் சென்று உங்கள் விருப்படி settings ஐ அமைத்து கொள்ளுங்கள்...





இதை போன்று software profiles பற்றி அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்...

No comments: