கணினில் உள்ள குப்பைகளை அகற்ற எத்தனையோ மென்பொருட்கள் உள்ளன ,சிலவற்றை நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டும்,சிலவற்றை நமக்கு இலவசமாக இணையத்தில் கொடுகிறார்கள், அவ்வாறு கிடைக்கும் சில பொருட்கள் நமக்கு திருப்திகரமாக இருப்பதில்லை. ஒரு மென்பொருளை பயன்படுத்துவதற்கு முன்பு அதை பற்றி தெரிந்து கொண்டால் நல்லது. அந்த வகையில் Ccleaner பற்றி நாம் பார்போம்.
Ccleaner இணையத்தில் இலவசமாக வழங்கப்படும் மென்பொருள்.இது கணினியில் உள்ள குப்பைகளை மற்றும் அகற்றுவதிலை மேலும் பல வேலைகளை நமக்கு இலவசமாக செய்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன். அதை பயன்படுத்தி தரவிறக்கி கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் install செய்தவுடன் மேலை காணப்படும் window open ஆகும். அதில் Ccleaner.com-க்கு கீழே நமது கணினியை பற்றிய விவரங்களை கொடுகிறார்கள். அதற்கு கீழே நான்கு tabs உள்ளன. அவை cleaner,registry,tools,options. இதில் cleaner நமது கணினியில் உள்ள தேவை இல்லாத குப்பைகளான temporary files, thumbnail cache ,windows log files,போன்ற எண்ணற்ற தேவையில்லாத குப்பைகளை அகற்றுகின்றன.இதில் இரண்டு tabs உள்ளன ஓன்று windows இது நமது os உள்ள குப்பைகளை காட்டுகின்றன ,இதில் நீங்கள் அழிக்க விரும்புகிறதை check box-ல் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பின்பு analyze என்ற button அழுத்துங்கள்.அழிக்கப்படும் files-ன் விவரங்களை காட்டும்.பின்பு run cleaner என்பதை click செய்து முழுமையாக அழித்து விடுங்கள் .applications என்ற tab நாம் கணினியில் பயன்படுத்தும் மென்பொருட்களால் உண்டாகும் குப்பைகளை காட்டுகின்றன ,இதையும் மேலை சொன்ன முறையை பயன்படுத்தி அழித்து விடுங்கள்.
அடுத்தது registryஐ click செய்யுங்கள் இது நம் registry-ல் உண்டாகும் பிரட்சனைகளை சரி செய்கின்றது.இதனில் scan for issues என்பதை click செய்யுங்கள்.நமது registry உள்ள பிரட்சனைகளை காட்டுகின்றது.fix selected issues என்பதை click செய்யுங்கள் அதுவே தானாக பிரச்னைகளை சரி செய்து விடுகின்றன.
அடுத்தது tools என்ற tabஐ click செய்யுங்கள் அதில் uninstall, startup, system restore ,போன்ற options இருக்கும் . அதில் uninstall என்பது நமது கணினியில் நாம் உபயோகித்து விட்டு வேண்டாம் என்று நினைக்கும் மென்பொருட்களை நீக்க பயன்படும்,நமது osல் அந்த வசதி இருகின்றது ஆனால் அது சில filesஐ நீக்காமல் விட்டுவிடுகின்றது.அது நமது கணினியில் குப்பையாக சேர்த்து விடுகின்றது ஆனால் Ccleaner பயன்படுத்தும் போது இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லை அது எல்லா filesஐ மொத்தமாக நீக்கி விடுகின்றது.startup என்பது சில மென்பொருட்கள் நமது கணினி on ஆகும் போது தொடக்கத்தில் வந்து register பண்ணுங்கள் update பண்ணுங்கள் என்று தொந்தரவு கொடுக்கும் அதை disable செய்ய இது பயன்படுகின்றது,அடுத்தது system restore இது நமது கணினியில் system restore pointஐ manage பண்ண உதவுகிறது.
அடுத்ததாக options அதில் நம் வசதிக்கு ஏற்ப எந்த மென்பொருளை பயன்படுத்த settings ஐ கொடுக்கலாம்,உதாரணத்திற்கு நாம் இணையத்தில் உலாவும் போது சில வலைத்தளங்கள் நம்மை நினைவில் வைத்துக்கொள்ள cookies பயன்படுத்துகின்றன, நாம் Ccleaner ஐ பயன்படுத்தும் போது எல்லா cookiesம் அழிக்கபடுகின்றன,நமக்கு சில நல்ல வலைதளங்களின் cookies அழிக்க வேண்டாம் என்றால் options சென்று கட்டளை கொடுக்கலாம்,இப்படி இன்னும் பல வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளன உபயோகித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் .
No comments:
Post a Comment