Friday, July 9, 2010

Icon இல்லாமல் folder;

நாம் அனைவரும் நமது தகவல்களை ஒரு folder உருவாக்கி அதனுள் வைத்து இருப்போம்,அவரவர் உபயோகிக்கும் operating system-இக்கு ஏற்ப folder-களின் வடிவமைப்பு வேறுபடும், நாம் சற்று வித்தியாசமாக icon இல்லாமல் வெறும் பெயர்மட்டும் கொண்டு folder உருவாக்குவது இப்படி என்று பார்போம்.முதலில் ஒரு folder-ஐ உருவாக்கி அதற்கு பெயர் கொடுத்து விடுங்கள்,நான் எனது பெயரில் ஒரு folder உருவாக்கி இருக்கிறேன். அதன் மீது mouse-ஐ வைத்து right click செய்து அதில் properties-ஐ click செய்யுங்கள். Open ஆகும் புதிய window-ல் customize என்ற Tab-ஐ click செய்யுங்கள்.



கீழே உள்ளது போன்று window கிடைக்கும்;


அதில் change icon என்ற Tab-ஐ click செய்யுங்கள் மற்றொரு window open ஆகும்;

வட்டமிட்டு கட்டப்பட்டுள்ள பகுதயில் blank-ஆக உள்ளதை கவனியுங்கள் .அதில் ஒரு blank-ஐ select பண்ணுங்கள்.

நீல நிறமாக உள்ள பகுதி நான் select செய்தது.இனி o.k. கொடுங்கள் அவ்வளவுதான். அந்த folder icon இல்லாமல் வெறும் பெயர் மட்டும் இருக்கும்.



மேலை காணப்படும் vinoth பெயர் மட்டும் தெரிகிறதா அது ஒரு folder.





No comments: