Sunday, August 1, 2010

WINDOWS 7-இன் TRAIL PERIOD-ஐ அதிகரிக்க;

அன்புக்குரிய நண்பர்களுக்கு வணக்கம். விஸ்டாவின் தோல்வியை அடுத்து மைக்ரோ சாப்ட்ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் 7. மக்களிடையே நல் மதிப்பை பெற்றுள்ளது. பெருவாரியான நண்பர்கள் விண்டோஸ் xp-இல் இருந்து விண்டோஸ் 7-க்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக மைக்ரோ சாப்ட் windows 7-ன் trail version-ஐ 30 நாட்கள் நாம் பயன்படுத்த இலவசமாக தருகிறது. சரி இந்த 30 நாட்கள் எனக்கு போதாது இன்னும் சில நாட்கள் எனக்கு இதை பற்றி அறிந்து கொள்ள தேவை என்றால் அதற்கு ஒரு வழி இருக்கின்றது.அதாவது 30 நாட்கள் என்ற அளவை 120 நாட்களாக அதிகரிக்கலாம். அது எப்படி? என்று பார்ப்போம்



முதலில் உங்கள் கணினியில் my computer என்பதை தேர்வு செய்து அதன் மீது mouse-ஐ வைத்து right click செய்து கொள்ளுங்கள்.அதில் properties என்பதை தெரிவு செய்து click செய்யுங்கள்.


இதை நீங்கள் செய்தவுடன் ஒரு window ஓபன் ஆகும் அதில் உங்கள் கணினியை பற்றி அனைத்து விவரங்களும் இருக்கும் கடைசியாக நீங்கள் பார்த்தால் இன்னும் எவ்வளவு trail period இருக்கிறது என்று தெரியும்.


இதில் இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள activate செய்ய வேண்டும் என்ற செய்தி இருப்பதை கவனியுங்கள்.

அடுத்ததாக உங்கள் கணினியில் start-All programs-accessories-command prompt-ன் மீது right click செய்து அதில் run as administrator என்பதை தெரிவு செய்து click செய்யுங்கள்.


Command prompt window open ஆகும். அதில் நீங்கள் slmgr -rearm என்ற வரிகளை type செய்து enter கொடுங்கள்.


சிறிது நேரத்திற்க்கு பின்பு உங்கள் கணினியை restart செய்ய வேண்டும் என்ற message வரும் அதில் o.k கொடுங்கள்.


வெற்றிகரமாக அனைத்தையும் முடித்து விட்டிர்கள். இனி உங்கள் கணினியில் mycomputer-ஐ தெரிவு செய்து properties பாருங்கள். உங்கள் கணினியின் trail period 30 நாட்களுக்கு அதிகரித்து இருக்கும்.


இனி இந்த period முடியும் தருவாயில் மேலே சொன்ன அதை முறையை பயன்படுத்தி அடுத்த 30 நாட்களை அதிகரித்து கொள்ளுங்கள். இதை போன்று 120 (3 முறை ) நாட்கள் வரை அதிகரித்து கொள்ளலாம். அதற்கு மேலே micro soft அனுமதி தரவில்லை.

2 comments:

p said...

நல்ல பதிவு... but
அது ஏன் 120 நாள் கஞ்சத்தனமா.... இப்பதான் crack இருக்கே தலைவா... :-P

Vinoth John said...

sethupathi;

crack உபயோகிப்பது சட்டப்படி தவறு.