Thursday, February 19, 2026

பில்லியன் டாலர் தவறுகள்: யாகூவின் வீழ்ச்சி

உன்கிட்ட ஒப்பனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினீஷிங் சரியில்லையே இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ யாகூக்கு சரியாக பொருந்தும்.

90-களின் இறுதியில் கூகுள், பேஸ்புக் போன்ற பெயர்களே இல்லாத காலத்தில், "இணையம் என்றால் அது யாகூ தான்" என்ற நிலை இருந்தது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் என்றாலும் தவறாக எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் கூட அந்த சாம்ராஜ்யத்துக்கு சாவு மணி அடித்துவிடுகின்றன அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் யாகூ…..

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தாங்கள் உருவாக்கிய 'BackRub') என்ற தேடல் நுட்பம் யாகூவிடம் விற்க வந்தனர் வெறும் 1 மில்லியன் டாலர்க்கு. எங்களிடமே சிறந்த தேடுபொறி இருக்கும் போது உங்கள் தேடு பொறி எங்களுக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பியது யாகூ. அவர்கள் நிராகரிந்த அந்த தேடுபொறி தான் இன்றைய இணைய அரசன் கூகுள்.

Know-it-all to Learn-it-all

 

"மைக்ரோசாஃப்ட் என்பது எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் நிறுவனம் (Know-it-all) அல்ல; அது எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் நிறுவனமாக (Learn-it-all) மாற வேண்டும்"

2014-ல் சத்யா நாதெல்லா சிஇஓ-வாகப் பொறுப்பேற்றதும் அவர் பேசிய வார்த்தைகள் தான் இவை.

“யானைக்கும் அடி சறுக்கும்” என்ற பழமொழி உண்டு அதே போன்ற நிலைமை தான் அன்றைக்கு மைக்ரோசாப்ட்டுக்கு ஏற்ப்பட்டு இருந்தது. சத்யா நாதெல்லா பதவியேற்க்கும் நேரம் மைக்ரோசாஃப்ட் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்தது எனலாம். விண்டோஸ் 8-ல் படுதோல்வி அதே நேரத்தில் நோக்கியா நிறுவனத்தையும் வாங்கி பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருந்தது. இந்த நேரத்தில் தான் சத்யா பதவியேற்கிறார்.

I am because we are

லினக்ஸ் ஒரு புரட்சி என்றால், அந்தப் புரட்சியைச் சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை உபுண்டு (Ubuntu) இயங்குதளத்தையே சாரும்.

2004-ம் ஆண்டு, லினக்ஸ் என்பது கணினி நிபுணர்களுக்கு (Geeks) மட்டுமே புரியும் ஒரு மொழியாக இருந்தது. "ஏன் ஒரு சாதாரண மனிதனால் லினக்ஸைப் பயன்படுத்த முடியாது?" என்ற கேள்வி ஒரு மனிதனுக்கு தோன்றியது தோன்றியது. அதன் விளைவாக உருவானதுதான் உபுண்டு.

மார்க் ஷட்டில்வொர்த்

மார்க் ஷட்டில்வொர்த் ஒரு தென்னாப்பிரிக்க தொழில்முனைவோர், விண்வெளி சுற்றுலாப் பயணி மற்றும் லினக்ஸ் உலகின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். இவர் செப்டம்பர் 18, 1973 அன்று தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.

"ஒரு சிறு பொறியும்... உலகை ஆளும் பென்குயினும்!"

 

ஒரு மாணவர் தனது அறையில் பொழுதுபோக்காக ஆரம்பித்த விஷயம், இன்று உலகத் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக நிற்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆம்! அது தான் உண்மை.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்ற 21 வயது மாணவர், தனது கணினியில் பயன்படுத்துவதற்காக ஒரு புதிய இயக்குதளத்தை (Operating System) உருவாக்க முயன்றார். அப்போது அவர் 'மினிக்ஸ்' (Minix) என்ற சிஸ்டத்தை பயன்படுத்தி கொண்டிருந்தார். மினிக்ஸ் (Minix) என்பது யூனிக்ஸ் (Unix) போன்ற ஒரு இயக்குதளமாகும். இது 1987 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆண்ட்ரூ எஸ். டானென்பாம் (Andrew S. Tanenbaum) என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் வணிக ரீதியானது அல்ல; பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு இயக்குதளம் (Operating System) எப்படி வேலை செய்கிறது என்பதைச் சொல்லிக் கொடுப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது. மினிக்ஸில் இருந்து சில குறைகளை லினஸ் சரி செய்து அதை மேம்படுத்த நினைத்தார். அந்த முயற்சியில் உருவானது தான் லினக்ஸ்.

"Selling something that doesn't exist" - Story of Billionaire

இல்லாத ஒன்றை விற்க முடியுமா ?

முடியும் ! முடிவது மட்டுமல்ல அதை விற்று உலகப்பணக்காரராகவும் மாற முடியும் எப்படி ? என்ன கொஞ்சம் ரிஸ்க் எடுக்கனும் மற்றவங்க மாதரி இல்லாம மாற்றி யோசிக்கணும்.

1980-களில் ஐபிஎம் நிறுவனம் தனது புதிய தனிநபர் கணினிகளுக்காக (PC) ஒரு இயங்குதளத்தை (Operating System) தேடிக்கொண்டிருந்தது. அப்போது மைக்ரோசாப்ட் ஒரு சிறிய நிறுவனமாக இருந்தது. ஐபிஎம் அதிகாரிகள் பில் கேட்ஸை அணுகி, "உங்களிடம் எங்களுக்கான ஒரு ஓஎஸ் இருக்கிறதா?" என்று கேட்டனர்.

உண்மையில் அந்த நேரத்தில் பில் கேட்ஸிடம் எந்த ஓஎஸ்-உம் கிடையாது. ஆனால் கிடைத்த வாய்ப்பை  அவர் விடுவதாக இல்லை, "ஆமாம், எங்களிடம் இருக்கிறது" என்று கூறி ஐபிஎம் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இணைய உலகின் புரட்சியாளன்: Mozilla Firefox உருவான கதை

 இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (IE) என்ற அரக்கனை எதிர்த்துப் போரிட்ட ஒரு "நெருப்பு நரி" தான் பயர்பாக்ஸ் (Firefox). உண்மையில்  "பயர்பாக்ஸ் லோகோவில் இருப்பது நரி அல்ல, அது ஒரு சிவப்பு பாண்டா!"

நெட்ஸ்கேப் (Netscape) - ஆரம்பப்புள்ளி

90-களின் இறுதியில் நெட்ஸ்கேப் என்ற பிரவுசர் தான் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் ஓஎஸ்-உடன் 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' பிரவுசரை இலவசமாக இணைத்து அனுப்பியதால், நெட்ஸ்கேப் சந்தையில் வீழ்ந்தது.

தோற்றுப்போன அந்த நிறுவனம், ஒரு அதிரடி முடிவை எடுத்தது. நான் வீழ்ந்தாலும் உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறுவேன் என்று தனது பிரவுசரின் குறியீடுகளை (Source Code) உலகிற்குப் பொதுவாக்கியது (Open Source). இதை நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் உருவானதுதான் Mozilla Project. இந்த அமைப்பின் நோக்கம் இணையத்தின் அதிகாரம் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கையில் மட்டுமே இருக்கக்கூடாது.

Bitten Apple : ஆப்பளின் அந்த "கடி"யின் உண்மை

 ஆப்பிள் நிறுவனத்தின் அந்த "கடிக்கப்பட்ட ஆப்பிள்" (Bitten Apple) லோகோ உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது. இதில் பல கட்டுக்கதைகள் (Myths) உலவினாலும், உண்மையான காரணம் எளிமையானது.

என் கல்லூரி காலங்களில் ஒரு கதை பரப்பப்பட்டது. ஆப்பிளின் நிறுவனர் ஒரு முறை அந்த நிறுவனத்தின் லோகோ பற்றிய நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாக்களை கொடுத்தனர் யாருக்கும் ஒத்த உடன்பாடு ஏற்படவில்லை உடனே ஸ்டீவ்க்கு கோவம் வந்து தன் மேஜை மீது இருந்த ஆப்பிளை எடுத்து அதை ஒரு கடி கடித்து விட்டு இது தான் இனி என் நிறுவத்தின் லோகோ என்றாராம் உடனடியாக மற்ற அனைவரும் அதை ஒத்து கொண்டனராம். இப்படி ஒரு கதை உலாவியது.

இதை சொன்ன நண்பனிடம். இதெல்லாம் நம்பு மாதிரியா இருக்கு என்றேன்.

நம்புனாத்தான் டீ. நீ எப்படி கேண்டீன் வர்றியா ? என்றான்.

"நம்புறேன் "என்று நானும் அவனுடன் கேண்டீன் சென்று விட்டேன்.

ஒத்த "டீ"க்காக அந்த கதையை நம்பிட்டேன் இத்தன வருஷத்துக்கு அப்புறம் தான் உண்மை தெரியுது.

இந்த லோகோவை 1977-ல் வடிவமைத்தவர் ராப் ஜானோஃப் (Rob Janoff) என்ற கிராஃபிக் டிசைனர்.

Wednesday, February 18, 2026

தற்காலிக மின்னஞ்சல் Temp Email,Disposable Email

இன்றைய டிஜிட்டல் உலகில், நாம் ஒரு சாதாரண செய்தியைப் படிக்கவோ அல்லது ஒரு கோப்பை (File) பதிவிறக்கம் செய்யவோ நினைத்தால் கூட, அந்த இணையதளம் நமது மின்னஞ்சல் முகவரியைக் கேட்கிறது. இவ்வாறு எல்லா இடங்களிலும் நமது உண்மையான மின்னஞ்சலைக் கொடுப்பது பாதுகாப்பானதா? என்ற அச்சம் நமக்குள் இருக்கிறது இங்கே தான் 'தற்காலிக மின்னஞ்சல்' (Temp Email) முக்கியத்துவம் பெறுகிறது.

தற்காலிக மின்னஞ்சல் (Temp Email) என்றால் என்ன?

தற்காலிக மின்னஞ்சல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செயல்படும் ஒரு தற்காலிக முகவரி ஆகும். இதற்குப் பதிவு செய்யவோ, கடவுச்சொல் (Password) உருவாக்கவோ தேவையில்லை. வேலை முடிந்தவுடன் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு (உதாரணமாக 10 நிமிடம் முதல் 24 மணிநேரம் வரை) இந்த மின்னஞ்சல் தானாகவே அழிந்துவிடும்.

Monday, February 16, 2026

கூகுளில் வேலைப் பார்க்கும் ஆடுகள்

 

கூகிள்
நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகமான 'கூகிள்ப்ளெக்ஸ்' (Googleplex) கலிபோர்னியாவின் மவுண்டன் வியூ (Mountain View) பகுதியில் அமைந்துள்ளது. Googleplex  என்பது "Google" மற்றும் "Complex" ஆகிய இரு சொற்களின் இணைப்பாகும். இது சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான வளாகம்.

கூகிள்ப்ளெக்ஸ் வளாகத்தின் புல்வெளிகள் மற்றும் வெளிப்புறப் பகுதிகள் வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், படைப்பாற்றலைத் தூண்டவும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள புல்வெளிகளைப் பராமரிக்க வழக்கமான புல் வெட்டும் இயந்திரங்களைப் (Lawn Mowers) பயன்படுத்தும்போது சில சிக்கல்கள் இருந்தன புல் வெட்டும் இயந்திரங்கள் அதிக சத்தத்தை உருவாக்கும். இது ஊழியர்களின் வேலைக்கு இடையூறாக இருந்தது மற்றும் இயந்திரங்கள் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்குவதால் கார்பன் வெளியேற்றம் (Pollution) ஏற்ப்பட்டது மேலும் காய்ந்த புற்கள் அதிகமுள்ள பகுதிகளில் இயந்திரங்கள் செல்லும்போது தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன

Remove Temporary Files : Speed up Computer

 

தேவையற்ற தற்காலிக கோப்புகளை (Temporary Files) நீக்குதல்

உங்கள் கணினியை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தும்போது, அதில் சேரும் தேவையற்ற குப்பை கோப்புகள் (Cache & Temp files) கணினியின் வேகத்தைக் குறைக்கும். அதை எப்படிச் சுத்தம் செய்வது என்று பார்க்கலாம்:

  1. உங்கள் கீபோர்டில் Windows + R பட்டன்களை ஒன்றாக அழுத்தவும்.

  2. இப்போது ஒரு சிறிய 'Run' விண்டோ ஓப்பன் ஆகும். அதில் %temp% என்று டைப் செய்து 'Enter' அழுத்தவும்.

  3. ஒரு ஃபோல்டர் திறக்கும். அதில் உள்ள அனைத்து ஃபைல்களையும் தேர்ந்தெடுத்து (Ctrl + A) டெலீட் (Delete) செய்யவும்.

  4. இதேபோல் மீண்டும் 'Run' விண்டோவை ஓப்பன் செய்து, அதில் temp மற்றும் prefetch என தனித்தனியாக டைப் செய்து உள்ளே இருக்கும் கோப்புகளை நீக்கவும்.

குறிப்பு: சில ஃபைல்களை டெலீட் செய்ய முடியாது என்று மெசேஜ் வந்தால், அதை 'Skip' செய்துவிடலாம். ஏனெனில் அவை தற்போது ஏதேனும் ஒரு மென்பொருளால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கலாம்.

இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்வதன் மூலம் உங்கள் கணினி புத்துணர்ச்சியுடன் (Fresh) இயங்கும்.