உன்கிட்ட ஒப்பனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினீஷிங் சரியில்லையே இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ யாகூக்கு சரியாக பொருந்தும்.
90-களின்
இறுதியில் கூகுள், பேஸ்புக் போன்ற பெயர்களே இல்லாத காலத்தில், "இணையம் என்றால் அது யாகூ தான்" என்ற நிலை இருந்தது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் என்றாலும்
தவறாக எடுக்கும் சின்ன சின்ன முடிவுகள் கூட அந்த சாம்ராஜ்யத்துக்கு சாவு மணி அடித்துவிடுகின்றன
அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் யாகூ…..
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தாங்கள் உருவாக்கிய 'BackRub')
என்ற தேடல் நுட்பம் யாகூவிடம் விற்க வந்தனர் வெறும் 1
மில்லியன் டாலர்க்கு. எங்களிடமே சிறந்த தேடுபொறி இருக்கும் போது உங்கள் தேடு பொறி
எங்களுக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பியது யாகூ. அவர்கள் நிராகரிந்த அந்த
தேடுபொறி தான் இன்றைய இணைய அரசன் கூகுள்.




