கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பித்து விட்டன..மாணவர்கள் சீருடைகளை அணிந்து புத்தக பைகளை தூக்கிக் கொண்டு போவதே தனி அழகுதான்..அதை பார்க்கும் போது கடந்தகால பசுமையான நினைவுகள் மனதில் வரதான் செய்கின்றன.ஒரு விஷத்தை பார்திர்களா பள்ளியில் படிக்கும் போது மாணவர்களுடைய எண்ணம் எப்போது தான் கல்லூரிக்கு செல்வோம் என்று இருக்கும்..கல்லூரி வாழ்கை முடித்து வேலைக்கு போன பிறகு பள்ளி மாணவர்களை சந்திக்கும் போது மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காத என்று தோன்றும்.சரி விசயத்திற்கு வருவோம்.
முன்பெல்லாம் மாணவர்கள் பெரிய பெரிய புத்தக பைகளை தூக்கிகொண்டு பள்ளிக்கு செல்வர்கள்..ஆனால் தற்போது கணினி யுகம் பள்ளி புத்தகங்கள் அனைத்தும் e-books ஆக வெளிவந்து விட்டன..6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து பாடபிரிவுகளுக்கும் உண்டான புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகல்வி ஆணையத்தால் இணையத்தில் மென் புத்தகங்களாக வெளியிடப்பட்டு இருகின்றன.
அதன் இணையதள முகவரி
இங்கு சென்று உங்கள் தேவையான வகுப்பிற்கு உரிய புத்தகங்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.
இனி வரும் காலங்களில் மாணவர்களின் தோள்களில் புத்தக பைகளுக்கு பதிலாக கைகளில் tab pc இருக்கும்.
இது மாணவர்களுக்கு மட்டும் பயன்படும் என்றில்லை..TBPSC group 1,2 etc..தேர்வு எழுதுபவர்கள் இனி புத்தகங்களுக்காக கடை கடையாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை..இதனால் புத்தகங்களுக்கான தட்டுப்பாடு குறையும்.
2 comments:
மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்..
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
Post a Comment