Thursday, June 7, 2012

50-வது பதிவு ; நன்றி !!!


இது என்னுடைய 50வது பதிவு..2010-ம் ஆண்டு july 9 தேதி என்னுடைய முதல் பதிவை (Windows Shortcut Keys)உங்களுடன் பகிர்ந்தேன்..சரியாக இரண்டு வருடங்கள் ஆக போகிறது.இப்பொது தான் என்னுடைய 50 வது பதிவிற்கு வருகிறேன்..இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமைப் பட்டு இருக்கிறேன்..

tvs50.blogspot.com இவர் தான் என் மானசீக குரு.நான் யாரென்று இவர்க்கு தெரியாது இவர் யாரென்று எனக்கும் தெரியாது .ஆனால் எங்கள் இரண்டு பேரையும் இணைத்து tvs50.blogspot.com , ஒரு நாள் ஆனந்த விகடன் படித்து கொண்டிருந்தபோது அதில் விகடன் வரவேற்பறையில் tvs50.blogspot.com பற்றி எழுதி இருந்தார்கள், சரி என்னதான் இருக்கிறது பார்போம் என்று website –open செய்து பார்த்தேன் அன்று முதல் நான் tvs50இன் பரம ரசிகன் ஆகிவிட்டேன்..blogspot என்ற ஒன்றை எனக்கு அறிமுக படுத்தியதே இவர் தான்.  ஆனால் என்னவென்று தெரியவில்லை tvs50 பல மாதங்களாக தன்னுடைய blog-இல் எந்தவொரு பதிவையும் எழுதவில்லை.உங்களுடைய வருகைக்காக காத்துகொண்டு இருக்கிறோம் tvs50.


அந்த நேரங்களில் இப்போது இருப்பது போன்று அவ்வளவாக தமிழ் technical bloggers கிடையாது வெகு சிலர் மட்டும் தான் இருந்தார்கள் .அவர்களில் நான் அறிந்த மற்றொருவர்  டவுசர் பாண்டி சென்னை தமிழில் கலக்குவார் இவரும் பல மாதங்களாக பதிவுகள் எதுவும் எழுதவில்லை.. (அண்ணாதே உன்ன காணாது ஒரே பீலிங்க்ஸ் கீது தலிவா )

அடுத்தவர் புதுவை நித்தியானந்தம், www.pudhuvai.com, அந்த நேரங்களில் எனது favorite website இவரது இணைய தளத்தில் நான் கணினியை  பற்றி  கற்றுக்கொண்டது ஏராளம்.அதை வைத்து கொண்டு college –ஐ கலக்கியது வேறு விஷயம்..இப்பொது புதுவை.com under construction-இல் உள்ளது மீண்டும் அதன் வரவை எதிர் பார்த்து காத்துகொண்டு இருக்கிறோம் சீக்கிரம் வாங்க தலைவா. 

அடுத்ததாக சூரிய கண்ணன் ,விண்மணி ,பிகேபி,சைபர்சிம்மன்,மென்பொருள் பிரபு,வேலன்   இவர்கள் எல்லாம் என்னுடைய ஆசிரியர்கள் ,இவர்களுடன் compare பண்ணும் போது நாங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை பதிவு உலகின் ஜாம்பவான்கள் இவர்கள்.இவர்களுடன் நான் இன்று blogspot-இல் எழுதிகிறேன் என்பதே என்னுடைய பெருமை.

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்த போது கணினியை பற்றி என்னுடைய அறிவு பூஜ்யம்.ஒன்றும் தெரியாது ஆனால் நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது computer lab-இல் system service செய்வேன்.இன்று நான் கணினி துறையில் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் கணினியை பற்றி இவர்கள் எனக்கு கற்று தந்த அடிப்படை கல்வி.மற்றும் அதன் நுனூக்கங்கள் தான்..

தமிழை வளர்த்தோம் ,நாங்கள் தான் தமிழ் தாயின் பிள்ளைகள் என்று வெறும் வெட்டி  பேச்சாக பேசும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில்.தமிழை அடுத்த பரிணாமத்திறக்குள் சத்தம் இல்லாமல் கொண்டு சென்றவர்கள் இவர்களை போன்றோர்..technical education –ஐ எங்கள் தாய் மொழியில் சிறப்பாக தரமுடியும் என்று நிருபித்து காட்டியவர்கள்.

இந்த சந்தோஷமான தருணத்தில் எல்லா வல்ல என் இறைவனுக்கும் ,அடுத்தபடியாக இருக்கும் என் ஆசிரியர்களுக்கும் என் நன்றியை சிரம் தாழ்த்தி தெரிவித்து கொள்கிறேன்.







2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே !

Vinoth John said...

வருகைக்கு நன்றி தனபாலன் sir;

நன்றி !!!