Friday, January 2, 2026

Biggest Mistakes in Tech History

ஒருவர் அவசரப்பட்டு எடுத்த ஒரு முடிவால் 25 லட்சம் கோடி ரூபாயை இழந்தார் என்றால் எப்படி இருக்கும் ?

அப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்கே என்றால் ஆப்பிளில்...

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியது யார் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் (Steve Wozniak) ஆகிய இருவரைத்தான் பெரும்பாலோனோர் கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியபோது ரோனால்ட் வேய்ன் (Ronald Wayne) என்ற மூன்றாவது நபர் இருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோவை வரைந்தவர் இவர்தான். அது இப்போது நாம் பார்க்கும் 'ஆப்பிள்' வடிவம் கிடையாது. ஐசக் நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிக்கலான ஓவியம் அது அதை விட மற்றொரு முக்கிய பணி அவருக்கு இருந்தது ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் வோஸ்னியாக் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் ஒரு 'நடுவராக' அவர் இருந்தார்


வேய்ன் செய்த அந்த 'பில்லியன்' டாலர் தவறு

ஆப்பிள் நிறுவனம் 1976-இல் தொடங்கப்பட்டபோது, ரோனால்ட் வேய்னிடம் 10 சதவீத பங்குகள் (Shares) இருந்தன. அப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்காக அதிக கடன் வாங்கத் தொடங்கினார். ஒருவேளை நிறுவனம் நஷ்டமடைந்தால், கடன் கொடுத்தவர்கள் தனது சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று ரோனால்ட் பயந்தார் (ஏனெனில் மற்ற இருவரிடமும் அப்போது பெரிய சொத்துக்கள் இல்லை). வெறும் $800: நிறுவனம் தொடங்கி வெறும் 12 நாட்களிலேயே தனது 10% பங்குகளை வெறும் 800 டாலருக்கு விற்றுவிட்டு வெளியேறினார்.

இன்று அதன் மதிப்பு என்ன?

ரோனால்ட் வேய்ன் விற்ற அந்த 10% பங்குகளை அவர் இன்றுவரை வைத்திருந்தால், அதன் மதிப்பு சுமார் 300 பில்லியன் டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய்!) மேல் இருக்கும்.

இவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்த போதிலும், அவர் அதற்காக வருத்தப்படவில்லை என்று பல முறை அவர் பேட்டிகளில் கூறியுள்ளார். "அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவு சரியானது தான்" என்பதே அவர் இப்போதும் சொல்லும் பதில்.

No comments: