2000-களின் தொடக்கத்தில் இணைய உலகம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) வசம்தான் இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தது.
லாரி பேஜின் கனவும், சுந்தர் பிச்சையின் யோசனையும்
கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோருக்கு ஒரு பயம் இருந்தது. மைக்ரோசாப்ட் தனது பிரவுசரில் இருந்து கூகுள் தேடுபொறியை (Google Search) நீக்கிவிட்டால் என்ன செய்வது?
அப்போது கூகுளில் ஒரு இளம் மேலாளராக இருந்தவர் சுந்தர் பிச்சை. அவர், "கூகுள் தனக்கென ஒரு சொந்த பிரவுசரை உருவாக்க வேண்டும்" என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.
"வேண்டாம்" (Big No) என்று மறுத்த சிஇஓ
ஆனால், அப்போதைய கூகுள் சிஇஓ எரிக் ஷ்மிட் (Eric Schmidt) இந்த யோசனையைத் திட்டவட்டமாக மறுத்தார். "பிரவுசர் போரில் இறங்குவது கூகுளுக்குத் தேவையில்லாத வேலை, அது நம்மைச் சிதைத்துவிடும்" என்று அவர் பயந்தார்.
ஆனால் சுந்தர் பிச்சை விடவில்லை. அவருக்கு நம்பிக்கை இருந்தது. சுந்தர் பிச்சை இந்தப் ப்ராஜெக்ட்டை ஒரு சிறிய மற்றும் திறமையான பொறியாளர்கள் குழுவைக் கொண்டு தொடங்கினார். அவர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரினிடம் ரகசியமாகச் சில பொறியாளர்களை வைத்து ஒரு 'டெமோ' (Demo) காட்டினார். அதன் வேகத்தையும் எளிமையையும் பார்த்த சிஇஓ, கடைசியில் சம்மதித்தார்.
Project Chrome
குரோம் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் சுவாரஸ்யமானது. பழைய பிரவுசர்களில் ஒரு டேப் (Tab) கிராஷ் ஆனால், மொத்த பிரவுசரும் மூடிக்கொள்ளும். இதை மாற்ற சுந்தர் முடிவு செய்தார்.அவர் தனது குழுவிடம், "ஒவ்வொரு டேப்பும் ஒரு தனிச் செயலி போல இயங்க வேண்டும்" என்று கூறினார். இதற்குத்தான் 'சாண்ட்பாக்ஸிங்' என்று பெயர். அதாவது ஒரு டேப் உடைந்தாலும் மற்றவை பாதுகாப்பாக இருக்கும். இதுதான் குரோமின் மிகப்பெரிய வெற்றியாக மாறியது.
சுந்தர்
பிச்சை, Firefox பிரவுசரில் பணியாற்றிய
அனுபவம் கொண்ட பென்
குட்ஜர் போன்ற நிபுணர்களைத் தனது குழுவில் சேர்த்தார். பிரையன் ராகோவ்ஸ்கி குரோமின் முதல் 'Product Manager' ஆகச் செயல்பட்டார். இவர்கள் சுந்தர் பிச்சையின் நேரடி மேற்பார்வையில் "ப்ராஜெக்ட் குரோம்" (Project
Chrome) குழுவாகச் செயல்பட்டனர்.
ஆரம்பத்தில்
குரோம் உருவாக்குவதற்கு, ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் WebKit என்ற ஓப்பன்
சோர்ஸ் இன்ஜினை சுந்தர் பிச்சையின் குழு பயன்படுத்தியது. பின்னாளில் கூகுள் தனது சொந்த 'Blink' இன்ஜினுக்கு மாறியது.
குரோமின்
அசுர வேகத்திற்கு மிக முக்கியமான காரணம் அதன் V8 JavaScript Engine. இதை உருவாக்கியது டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு சிறிய பொறியாளர்கள் குழு. இதற்கு தலைமை தாங்கியவர் லார்ஸ்
பாக் (Lars
Bak).
சுந்தர்
பிச்சை இந்தக் குழுவை டென்மார்க்கிலேயே ஒரு பண்ணை வீட்டில் (Farmhouse) ரகசியமாகச் செயல்பட அனுமதித்தார். ஏனென்றால் மைக்ரோசாப்ட்டுக்கு தெரியாமல்
ரகசியமாக அவர்கள் அந்த பணியை முடிக்க வேண்டும். அந்த
குழு உருவாக்கிய ஜாவாஸ்கிரிப்ட்
இன்ஜின்தான் அன்றைய காலகட்டத்தில் இணையத்தை மிக வேகமாக மாற்றியது.
பிரவுசரை
மிகவும் எளிமையாக (Minimalist
Design) மாற்ற ஒரு தனி டிசைன் டீம் வேலை செய்தது. "அட்ரஸ் பார்" (Address Bar) மற்றும் "சர்ச் பார்" (Search Bar) இரண்டையும் இணைத்து "Omnibox" என்ற புதிய முறையை இந்தக் குழுதான் அறிமுகப்படுத்தியது.
அறிமுகம்
செய்யப்பட்ட சில நாட்களிலேயே, அதன் வேகம் மற்றும் எளிமையைக் கண்டு உலகம் மிரண்டு போனது. விளம்பரங்கள் இல்லாத, தேடுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த அந்த டிசைன் மக்களைக் கவர்ந்தது.
வெறும்
சில ஆண்டுகளில், உலகின் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் குரோமைப் பயன்படுத்தத் தொடங்கினர். சுந்தர் பிச்சையை இன்று கூகுளின் உச்சத்தில் வைத்திருப்பது அவர் அன்று எடுத்த அந்த 'குரோம்' என்ற ரிஸ்க் தான்!
No comments:
Post a Comment