Thursday, April 14, 2011

Network topology 3 :


STAR TOPOLOGY:

இது ஒரு centralized management ஆகும்.network –இல் உள்ள அனைத்து கணினிகளும் centralized device-உடன் இணைக்கப்பட்டு இருக்கும்..இது மிகபெரிய அளவிலான network-இக்கு பயன்படுகிறது.இதில் centralized device-இல் எதாவது பிரச்சனை வரும் போது அது மொத்த network-ம் பாதிக்கிறது..மற்றபடி எதாவது ஒரு கணினியில் பிரச்சனை ஏற்படும் போது அது அந்த குறிபிட்ட கணினியை மட்டும் பாதிக்கிறது..இதில் centralized device-இக்கு தனிப்பட்ட மின்னினைப்பு தேவை படுகிறது..




centralized device-ஆக hub பயன்படும் போது broadcast நடைபெறும் அதாவது signals அனைத்து கணினிகளுக்கும் செல்லும்.அவ்வாறு இல்லாமல் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்படும் தகவல் சரியாக அந்த குறிபிட்ட கணினிக்கு மட்டும் சென்றடைய switch பயன்படுத்த வேண்டும்..



RING TOPOLOGY:

இதன வகையில் கணினிகள் அனைத்தும் ஒரு SINGLE CIRCLE OF CABLE –உடன் இணைக்கப்பட்டு இருக்கும்...இதில் எந்தவொரு Terminated end-ம் கிடையாது..இதில் உள்ள ஒவ்வொரு கணினியும் ஒரு repeater போன்று செயலாற்றும்..இதில் signal transmit பண்ண token ring என்ற technology பயன்படுத்த படுகிறது..இதில் ஒரு கணினி மற்றொரு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்ய இந்த token-இன் துணை தேவை..இந்த token circle-குள் சுற்றிக்கொண்டு இருக்கும்..



இதில் A என்ற கணினி C என்ற கணினிக்கு ஒரு தகவலை அனுப்புகிறது என்று வைத்து கொள்வோம் முதலில் அது token-ஐ receive செய்கிறது அதில் தகவலை இணைத்து அனுப்பிவிடுகிறது இந்த தகவல் முதலில் B என்ற கணினிக்கு செல்கிறது அது அந்த தகவல் தனக்குரியது அல்ல என்று தெரிந்து கொண்டு அந்த தகவலை boost up செய்து அனுபிவிடுகிறது அதன்பிறகு அந்த தகவல் C என்ற கணினிக்கு செல்கிறது அந்த கணினி தகவல் தனக்குரியது என்று அறிந்து அதை வாங்கிக்கொள்கிறது..பின்னர் அது அந்த token-இல் acknowledgement-ஐ இணைத்து அனுப்புகிறது.அது A என்ற கணினியை அடைந்தவுடன் token-ஐ release செய்கிறது..இவ்வாறு ஒரு தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கும் போது மற்றொரு கணினியால் தகவல் பரிமாற்றம் செய்யமுடியாது..இந்த technology token passing எனப்படும்....



No comments: