Wednesday, October 5, 2011

cisco packet tracer



PACKET TRACER என்னும் SOFTWARE cisco என்னும் multinational company-ஆல் வழங்கபடுகிறது .இம் மென்பொருளின் முக்கியத்துவத்தை குறித்து computer networking துறையில் உள்ள வல்லுனர்களும் அறிவார்கள்..computer networking பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மிகவும் முக்கியமான மென்பொருள்..இதில் real time-இல் ஒரு computer network-ஐ உருவாக்குவதற்கு முன்பாக இந்த மென்பொருளில் design செய்து அது எவ்வாறு செயல்படுகிறது என்று preview பார்க்கலாம்..மேலும் computer networking –இல் உள்ள ஒவ்வொரு devices –ம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்..computer networking பயிலும் மாணவர்கள் ஒன்றிக்கு மேற்பட்ட கணினிகளை இணைத்து அது எவ்வாறு செயல்படுகிறது என்று செயல் முறை விளக்கம் பார்ப்பது கடினம் மற்றும் இது அதிக பொருட்செலவும் ஆகும்..இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த மென்பொருள் பயன்படுகிறது..ஒரு மிகபெரிய அளவிலான network-ஐ இதில் design செய்து அவற்றின் செயல்முறையையும் இதில் காண முடியும்..

இணையத்தில் இது போன்று எண்ணற்ற மென்பொருட்கள் உள்ளன ஆனாலும் அவை எல்லாவற்றை காட்டிலும் packet tracer தனி சிறப்பு வாய்ந்தது..காரணம் அதில் real time and simulation என்று இரண்டு modes-உள்ளன..இதில் simulation mode-இல் packets எப்படி send/receive ஆகிறது என்பதை நாம் காண முடியும்..மேலும் பயன்படுத்துவதற்கு மற்ற அனைத்து மென்பொருட்களை விட இது தான் user friendly ஆக உள்ளது..இதன் தரவிறக்க சுட்டி :

Download http://www.mediafire.com/download/5v5e49khc7b1hep/PacketTracer533_setup.exe