ISO என்பது கோப்புகளை பாதுகாக்கும் ஒரு தொழில்நூட்பம். நமது கணிணியில் உள்ள முக்கியமான கோப்புகள் அனைத்தையும் பென்டிரைவ் அல்லது ஹார்டுடிஸ்க் போன்றவற்றில் Backup செய்து வைப்போம். சில வருடங்களுக்கு முன்னால் CD/DVD களில் Backup செய்து வைப்பார்கள். நமக்கு தேவைப்படும் நேரங்களில் அந்த கோப்புகளை எடுத்து பயன்படுத்துவோம். CD/DVD களில் Backup செய்வதில் உள்ள விர்ஷுவல் முறை தான் ISO.
புரியும் படியாக
சொல்வதென்றால் முன்பெல்லாம் CD/DVD Pouch என்று ஒன்று வைத்திருப்போம். நாம் Backup செய்யும்
CD/DVD களை அதில் வரிசைப்பிரகாரம் அழகாக அடுக்கி வைத்திருப்போம். அதே போன்ற அமைப்பை
நமது ஹார்டிஸ்க்கில் செய்தால் ?.
நாம் Backup
செய்ய விரும்பும் அனைத்து கோப்புகளையும் ஒவ்வொரு CD/DVD களாக மாற்றி வைத்திருந்தால்
எப்படி இருக்கும். அது தான் ISO image அல்லது ISO file.