Friday, July 9, 2010

பாதுகாப்பான இணையதளமா ?

இன்றய நவீன உலகத்தில் எல்லாமே இணையம் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது ,எந்தவொரு விசயங்களுக்கும் அனைவரும் இப்போது இணையதளங்களை நாடுகின்றனர்,சில சமயங்களில் நாம் தவறுதலாக நச்சு நிரல்கள் உள்ள தளங்களுக்கு சென்றுவிடுவோம்.நாம் என்னதான் நல்ல antivirus-ஐ உபயோகபடுதினாலும் இந்த நச்சு நிரல்கள் அவைற்றிக்கு எல்லாம் டாட்டா காட்டிவிட்டு நமது கணினிக்குள் வந்துவிடுகின்றன. இதன் காரணமாக virus,malware,spyware, போன்ற பிரட்சனைகளுக்கு உள்ளாகி இருப்போம்.


உலகில் எந்தவொரு பிரட்சனைகளுக்கும் முடிவு உண்டு ,அதே போன்று இந்த பிரட்சனைக்கும் ஒரு வலை தளம் தீர்வு கொடுகிறது. உங்களுக்கு எதாவது ஒரு வலைத்தளத்தில் நச்சு நிரல்கள் இருக்குமோ? என்ற சந்தேகம் வந்தால்,நேராக இந்த தளத்திற்கு வந்து விடுங்கள் தள முகவரி www.urlvoid.com

இந்த தளத்திற்குள் சென்றவுடன் insert site to check என்ற பாக்ஸ் உங்களுக்கு தெரியும்.
அதில் உங்களுக்கு சந்தேகமான தள முகவரியை கொடுங்கள் .பின்னர் scan now என்ற button-ஐ அழுத்துங்கள் .சிறிது நேரம் காத்திருங்கள்.அந்த தளம் முழுமையாக சோதிக்கப்பட்டு உங்களுக்கு சரியான முடிவுகளை தருகிறார்கள் .

உதாரணமாக நான் www.filehippo.com என்ற தள முகவரியை கொடுத்து உள்ளேன். அவர்கள் அளித்த report

1 comment:

Anonymous said...

submit button not visible while submitting comment

remove word verification from blogger settings